மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை :

மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை :

மதுரை,அக்.17– மதுரை ஹார்விப்பட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு செய்த போது பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகள் வைத்திராத கடைக்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மதுரை ஹார்விப்பட்டி, நெல்லையப்பபுரம் மற்றும் திருநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். மதுரை […]

திருப்பரங்குன்றத்தில் அண்ணா தி.மு.க.வி 46–வது ஆண்டு விழா;

திருப்பரங்குன்றத்தில் அண்ணா தி.மு.க.வி 46–வது ஆண்டு விழா;

திருப்பரங்குன்றம்,அக்.17– அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழாவையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.ஏல்.ஏ., கழக கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். கடந்த 1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி அனைத்திந்திய அண்ணா தி.மு.க என்ற இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கு இந்த இயக்கம் 1 1/2 கோடி தொண்டர்களை கொண்டு நாட்டின் 3–வது பெரிய இயக்கமாக திகழ்ந்து வருகிறது. அண்ணா தி.மு.க […]

அப்துல்கலாம் பிறந்த நாள்;மரக்கன்று வழங்கும் விழா

அப்துல்கலாம் பிறந்த நாள்;மரக்கன்று வழங்கும் விழா

பொன்னமராவதி, அக்.16– பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் பொன்னமராவதி சிட்டி லயன்ஸ் சங்கம், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. கேசராபட்டியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் பாலமுரளி தலைமைவகித்தார். செயலாளர் பிரவின்குமார், முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு டாக்டர் அப்துல்கலாம் திருவுருவப்படம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கினர். […]

தீபாவளி பண்டிகை: மதுரை ஆதீனம் வாழ்த்து

தீபாவளி பண்டிகை:  மதுரை ஆதீனம் வாழ்த்து

அனைவரும் ஈகை குணம் கொண்டு வாழ்வோம் என்று மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை ஆதீனம் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தீபாவளி என்பது பண வசதி கொண்டவர்களுக்கு அல்ல. வறுமையில் வாடுவோரை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் பணக்காரர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் தீபாவளி உருவாக்கப் பெற்றது. பணக்காரர்களுக்கு  தினசரி தீபாவளி தான். ஏழைகளுக்கு ஆண்டில் ஒரு நாள் தான் தீபாவளி. மனித உள்ளம் உயர்வான எண்ணங்களைக் கொண்டதாக அமைய […]

மதுரையில் அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழா;

மதுரையில் அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழா;

மதுரை, அக்.17– அண்ணா தி.மு.க.வின் 46–வது ஆண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க சார்பில் அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன் தலைமையில் கழக கொடியினை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். கடந்த 1972–ம் ஆண்டு அக்டோபர் 17–ந் தேதி அனைத்திந்திய அண்ணா தி.மு.க என்ற இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கு நாட்டின் 3–வது பெரிய இயக்கமாக திகழ்ந்து வருகிறது. அண்ணா தி.மு.க இயக்கத்தின் 46–வது ஆண்டு விழா இன்று […]

தென்மேற்கு வங்க கடலில் புதிய புயல் சின்னம்

தென்மேற்கு வங்க கடலில் புதிய புயல் சின்னம்

சென்னை, அக். 17– தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 3 மாதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா- – ஒரிசா கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக […]

பழனி முருகன் கோவில் வீதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை

பழனி முருகன் கோவில் வீதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை

பழனி, அக்.17– பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி அடிவாரம், கிரி வீதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. முருக பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 20ந் தேதி காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. இந்த கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்களின் வசதிகள் குறித்தும் திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் […]

வாடிப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள்

வாடிப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு  இலவச வேட்டி, சேலைகள்

வாடிப்பட்டி,அக்.17– தீபாவளி பண்டிகையையொட்டி காலபைரவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக வாடிப்பட்டியில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 10–வதுவார்டு காலபைரவர் சமூக நல அறக்கட்டளை சார்பாக தீபாவளி பண்டிகையையொட்டி அன்பே கடவுள் பார்வையற்றோர் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லத்தில் இலவச வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் தனலெட்சுமி, இணைசெயலாளர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

பெங்களூரில் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டம்:

பெங்களூரில் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டம்:

பெங்களூர், அக். 16– பெங்களூரில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர். இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது– பெங்களூரில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், அந்தக் கட்டிடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் ஷ்ரவண் […]

திருவள்ளூர் ‘கேட்டர் பில்லர்’ தொழிற்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சி

திருவள்ளூர் ‘கேட்டர் பில்லர்’ தொழிற்சாலையில்    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சி

சென்னை, அக். 14– சென்னை அருகே திருவள்ளூரில் அமைந்துள்ள கேட்டர் பில்லர் இந்தியா நிறுவனம் ‘உற்பத்தி தினத்தை’ சிறப்பாக கொண்டாடியது. இதையொட்டி அதன் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி, பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு திறன் வெளிப்படுத்துதல் போட்டிகள் ஆகியவை உட்பட ஆர்வமும், உற்சாகமும் ஊட்டுகிற பல தொடர் போட்டிகளை கேட்டர் பில்லர் இந்தியா நடத்தியது. இதை தேசிய தலைமை அலுவலரும் நிர்வாக இயக்குனருமான விவேக் […]

1 2 3 363