அசிங்கப்படுத்தாதே

கோபி  நாகரீகம் தலை காட்டாத ஒரு சின்னக் கிராமத்திலிருந்து  சென்னைக்கு வந்தவன். அவன் முதன் முதலாய் இந்த நகரத்தை மிதித்த போது, சொர்க்கம் வேறு எங்குமில்லை. சென்னையில் தான் உள்ளது என்பதை உணர்வுப் பூர்வமாகவே உணர்ந்தான். கிராமத்துக் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து வேலையைத் தேடிக் கொண்டிருந்தான். தனக்குத் தெரிந்த நண்பர்களோடு அறை எடுத்துத் தங்கியிருந்தான். குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லையென்று அலுவலக வாசல்களில் இறங்கி ஏறினான். கோபி வேல கெடச்சாப் பாரு. இல்ல வீட்டுக்கு வாப்பா.. […]

கோபம்

சிறுகதை ராஜாசெல்லமுத்து   முன்னெப்போதுமில்லாமல் அவள் முகம் சிவந்திந்ருதது. மூக்கின் உயரம் கொஞ்சம் உயர்ந்திருந்தது. அவள் எப்போதும் போல் இல்லை என்பதை இயல்பாகவே என்னால் உணர முடிந்தது. இப்போது பேசினால் என்னவாகும் ? கோபப்படுவாளோ? அஞ்சியது நெஞ்சம். பேசச் சொல்லிச் கெஞ்சியது என் எண்ணம். வரும் புயலுக்குப் பெயர் வைக்கும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் இவளுக்கு வரும் கோபத்திற்கு ஏன் பெயர் சூட்ட மறுக்கிறார்கள்? கோபக்கிளியின் மூக்கு, சிவந்ததைப் பார்த்து நாமே புதிய பெயர் வைக்கலாமா? ” கோபக் […]

உழைப்பே உயர்வு

சிறுகதை கோவிந்தராம் அற்புதசாமி எப்போதும் போலத் தன் இரட்டை குழந்தைகளான ஜான் – ஜெனிபர் இருவரையும் தன் ஆட்டோவிலேயே பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். காலையில் முதல் சவாரி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் மாலையில் கடைசி சவாரி பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதும் தான் அவரது அன்றாட வாழ்க்கை. அதற்குப் பின் ஓய்வு எடுப்பது வழக்கம். பள்ளியில் உள்ளவர்கள் ஜானும் ஜெனிபரும் வசதியான வீட்டுப் பிள்ளைகள். அதனால் தான் இருவரும் வருடம் முழுவதும் அரசு […]

ஆம்புலன்ஸ்

சிறுகதை  ராஜா செல்லமுத்து ‘கொய்ங் கொய்ங்’ என்ற சத்தத்தோடு வந்து கொண்டிருந்தது அந்த ஆம்புலன்ஸ். ‘சார் ஆம்புலன்ஸ் வருது.. வழி விடுங்க … வழி விடுங்க’ வாகன ஓட்டுநர்கள் வழிமொழிய சில நல்ல உள்ளங்கள் வழி விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே வழி மறித்து நின்றார்கள். ஏங்க இப்பவெல்லாம் வெத்து வண்டியில கூட சைரனைப் போட்டுச் சுத்தவிட்டு வாரானுக. எதுல நோயாளியக் கொண்டு போறான்; எந்த வண்டிய சும்மா கொண்டு போறான்னு தெரியல. நெறயாப் பேரு ஆம்புலன்ஸ வச்சு […]

வழிகாட்டி

சிறுகதை கோவிந்தராம் அனைவரும் முக்கிய விருந்தினர் வருகைக்காக காத்திருந்தனர். அதற்கு முன் சில சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு மாணவர் பிரபல நடிகர்களைப் போல் பல குரலில் பேசினார். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மேற்படி மாணவருக்குப் பிடிக்காத ஒருவர் அவரைப் போலவே பல குரலில் பேசி அசத்தினார். இவர்கள் இரண்டு பேரை பழிவாங்க நினைத்த மாணவி இருவர்களைப் போலவே பல குரலில் பேசி கை தட்டு பெற்றார். இந்த நிகழ்ச்சியைக் கேட்கப் பிடிக்காத […]

செல்லப்பிராணி

சிறுகதை ராஜா செல்லமுத்து ‘கனிமொழி ஒனக்கு மாப்பிள்ள புடிச்சிருக்கா?’ ‘ம்’ என லேசாகத் தலையாட்டினாள். ஆளு பாக்க சம்முன்னு இருக்காரு இவரப் புடிக்காமப் போகுமா என்ன? தோழிகள் பேசிக் கொண்டதில் கொஞ்சம் வெட்கப்பட்டாள் கனிமொழி. ‘ச்சீ… போங்கடி எப்பப் பாரு கிண்டல், கேலி தான் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் சென்றது தான் தாமதம் அதுவரையில் ‘உர்’ரென்று படுத்திருந்த செல்லப்பிராணி ‘நாட்டி’ திடுத்திடுவென ஓடிவந்து கனிமொழியின் இடுப்பு வரை தாவியது. ‘சரிடா… சரி… சரி… ம்… சரி….’ […]

சிறுகதை துரை. சக்திவேல் என்னங்க கொஞ்சம் சீக்கரம் இங்க வாங்க… இங்கு வந்து பாருங்க என்று தனது கணவரை அழைத்தாள் ரேவதி. என்னம்மா என்ன ஆச்சு என்று டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சங்கர் அவசர அவசரமாக வீட்டு வாசலுக்கு ஓடினார். அங்கு நின்று கொண்டிருந்த ரேவதியிடம் என்ன… என்ன ஆச்சு சொல்லுமா என்றான். இல்லங்க எதிரே கல்பனா வீட்டு வாசலைப் பாருங்க. புதுசா கார் நிக்குது என்றாள் ரேவதி. அட இதுக்குத்தான் இவ்வளவு அவசரமா கூப்பிட்டியா. நான் […]

இரண்டும் ஒன்று

சிறுகதை ராஜா செல்லமுத்து ‘‘சாப்பிட என்ன இருக்கு?’’ ‘‘பூரி, பொங்கல், இட்லி, வடை’’ ‘‘ம்… பூரி, மசால் வடை’’ ‘‘இந்தா தாரேன்’’ என பூரி மசால் வடையைக் கொடுத்தான் டிபன் கடைக்காரன். அது ஒரு சாலையோர உணவு விடுதி. ‘‘கொஞ்சம் சட்னி.’’ ‘‘இந்தா’’ சட்னியும் ஊற்றினான். லபக்.. லபக்கென பூரியைப் பிய்த்துக் போட்டான் கமலசேஷன். ‘‘கொஞ்சம் சாம்பார் குடுங்க’’ ‘‘ம்’’ கமலசேஷன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ‘‘ஐயா… ஐயா.. ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்டது. அவள் கையில் […]

வெட்கக் கேடு

சிறுகதை ராஜா செல்லமுத்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு…. டெல்லியிலிருந்து சென்னை வரும் சென்னை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் 2வது நடைமேடைக்கு வந்து சேரும் என்று தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. பயணிகள் பல பரிசோதனைகளுக்குப் பிறகே உள்ளே விடப்பட்டனர். ‘என்ன இன்னைக்கு இவ்வளவு பாதுகாப்பு’ ‘யாரோ டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் வாராங்களாம்?’ ‘ஏரோபிளேன்ல வரலயா?’ ‘நமக்கென்ன […]

பாடசாலை

சிறுகதை    கோவிந்தராம்    அடிவாரம் வந்ததும் காரிலிருந்து இறங்கினர் கனியமுதனும் அவரது நண்பர்களும். குதிரைக்காரர்கள் சிலர் அவர்களை அணுகினர். உச்சிக்கு போக வேண்டுமா? போய் திரும்ப வரவேண்டுமா என்று கேட்டனர். கனியமுதன் உச்சிக்குச் செல்ல எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்டார். மைல் என்றால் ஐந்து.கிலோ மீட்டர் என்றால் எட்டு என்றார் ஒரு குதிரைக்காரர். குதிரை எங்கே இருக்கிறது என்றார். இவை தான் குதிரைகள் என்று கழுதைப் போல் உள்ள மிருகங்களைக் காட்டினார். பாவம் […]

1 2 3 8