சிறுகதை

படத்தலைப்பு | ராஜா செல்லமுத்து

“என்ன டைட்டில் வச்சிருக்கீங்க ஆனந்த்”

“ம்…. நல்ல டைட்டில் தான் ராஜூ’’

“சொல்ல மாட்டீங்களா?”

இப்பவெல்லாம் யாரயும் நம்ப முடியாது ராஜூ. கேட்டுட்டு போய் அப்படியே வச்சுட்டுப் போயிறாங்க . அதான் பயமா இருக்கு”

“அப்ப சொல்ல மாட்டீங்க”

“என்னங்க ராஜூ சங்கடப்படுத்திட்டீங்க புளிய மரம்”தான் என்னோட தலைப்பு’’

“புளிய மரம்” ரொம்ப நல்லாயிருக்குங்க

“நன்றி”

“ஆனா … ஒரு பிரச்சினை இருக்கே

“என்ன ராஜ்”

சுந்தர ராமசாமின்னு ஒரு எழுத்தாளர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ இப்படி ஒரு தலைப்பு வச்சுருக்காரே”

“என்ன தலைப்பு”

ஒரு புளியமரத்தின் கதை”

“ராஜூ, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்ல

இல்ல ஆனந்த் சொன்னேன்,

“சரி சரி வையுங்க”

“ம்” ஒடனே இத ரிஜிஸ்தர் பண்ணுங்க எப்ப பண்ணப் போறீங்க

“நாளைக்கு”

“ஒடனே பண்ணுங்க. தமிழ்ச்சினிமாவுல கதை தான் பஞ்சமுன்னா படத்தலைப்புகளுக்கு அதவிட கடும் பஞ்சமா இருக்கு. ஒடனே பதிவு பண்ணுங்க’’

ஓகே ராஜூ …. நாளைக்கு வாரீங்களா?

போகலாம் ஆனந்த் எத்தன மணிக்கு வரணும். பத்துமணிக்கு வாரீங்களா?

ஓ.கே ஆனந்த். நான் கண்டிப்பா வந்திடுறேன். மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு ராஜூ வர ஆனந்தும் ரெடியாகவே இருந்தான்.

“ஆனந்த போகலாமா?”

“ஓ.கே ….. இருவரும் படத் தலைப்பு பதிவு செய்யும் நிறுவனத்துக்குச் சென்றனர்.

“சார் … நான் ஒரு படத்தலைப்பு பதிவு பண்ணனும்’’.

அப்பிடிங்களா?

” ஆமா சார்”

“அப்ளிகேஷன் வாங்கிட்டு பில் பண்ணி குடுங்க ’’என்று படத்தலைப்பு ஊழியர் சொல்லவும் ஆனந்த் அப்ளி கேஷனை பில் செய்து கொடுத்தான்.

“ஓ.கே போய்ட்டு வாங்க சார்”

“என்னோட படத்தலைப்பு”

“என்னாங்க நீங்க சினிமாவுக்கு புதுசா?

“ஆமா”

அதான் தெரியல

இங்க படத்தலைப்பு பதிவு பண்றதுக்கு மூணு எடம் இருக்கு சார். நீங்க எழுதிக் குடுத்த இந்த படத்தலைப்ப ஒரு சர்குலேசன் விடுவோம். அவங்களும் இந்த படத்தலைப்பு மாதிரி இருக்கான்னு பாப்பாங்க. அவங்க கிட்ட இந்த தலைப்பு இல்லன்னா உங்களுக்கு ஒடனே என். ஓ.சி குடுத்திருவோம்.

“அப்பிடியா? ”

“ஆமா சார் .போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு வாங்க

என்னது ஒரு வாரம் கழிச்சா?

ஆமா போயிட்டு வாங்க”

என்று படத்தலைப்பு கம்பெனி அனுப்ப இருவரும் வெளியே வந்தனர்.

“புளியமரம்” நல்ல தலைப்பா இருக்கே உச்சுக்கொட்டினார் – படத்தலைப்பு பதிவு செய்யும் அலுவலகத் தலைவர்

‘‘என்ன செய்யலாம் ’’ தீவிரமாக யோசித்தார்.

வெளியே வந்த ஆனந்தையும் ராஜீவையும் கூப்பிட்டார்கள்.

மிஸ்டர் ஆனந்த் ஒங்க தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு. இந்த தலைப்பு ஒட்டித்தான் ஒங்க திரைப்படம் இருக்கா?

ஆமா சார், இந்த தலைப்பு இல்லன்னா ரொம்ப கஷ்டம்

ஆமா சார் படம் பண்ணப் போறேன்.

புரடியூசர் ரெடிங்களா?

“ஆமா சார்,

“சரி போய்டடு வாங்க” என்ற தலைவர் இரண்டு இடங்களுக்கு சர்குலர் விடத்தயாரானார் .

ஒருவாரம் கடந்து ஆனந்த் ,ராஜூ, புரடியூசர் என மூவரும் மொத்தமாய் வந்தனர்.

“வாங்க ஆனந்த். எப்படி இருக்கிறீங்க அனுசரனையோடு பேசினார்.

“நல்லா இருக்கேன் சார்”

“என்னோட படத் தலைப்பு”

“ச்சே சொல்லுவே கஷ்டமா இருக்கு ஆனந்த்’’

என்ன சார் , என்னாச்சு

ஒண்ணுல்ல….. ‘புளிய மரம்ங்’கிற தலைப்ப ஒருத்தர் ரெண்டுவருசத்துக்கு முன்னாடியே பதிவு பண்ணி வச்சுருக்காங்க

“என்ன சார், சொல்றீங்க

“ஆமா ஆனந்த், சிந்தனைங்கிறது எல்லாத்துக்கும் ஒண்ணு தான் .அவங்களுக்கும் இந்த யோசணை வராதா என்ன?

“சார், இப்ப என்ன பண்றது?

ஒண்ணுல்ல ஒங்க தலைப்பு ஒங்ககிட்ட வந்து சேரும்.

நான் என்ன பண்ணனும் சார் .

ஒங்களோட இந்த டைட்டில் வச்சுத்தான் படம் இருக்கா ?

ஆமா சார் …

கவலையே படாதீங்க

என்ன பண்ணனும் சார்,

“ம்… ஒரு ரெண்டு லகரம் வெட்டுங்க’’,

என்ன – ரெண்டு லட்சமா?

“ஆமா, என்ன தம்பி யோசிக்கிறீங்க .பெரிய படம் . நல்லா ஓடும். இந்த சின்ன பணத்துக்கு ஒங்க தலைப்பு

விட்டுருராதீங்க,

ஆனந்திடம் ஆசை வார்த்தையை விதைத்தார், படத்தலைப்பு அலுவலர்

சார் அவ்வளவு பணம் முடியாதுங்களே

ம்… புரியுது …. சரி ஒன்றரை லட்சம் குடுங்க

சார் பேசாதீங்க…

இதுவே நான் கஷ்டப்பட்டு சொல்றேன்…..என்ன நடக்குதுன்னு தெரியல. ஒங்களுக்காக நான் பேசுறேன்

“சரிசார்’’ என்ற ஆனந்த் தயாரிப்பாளரிடமிருந்து பணம் வாங்கிக்கொடுத்தான்.

குட் …. நல்லா வருவீங்க.

ஆனந்த் கை கொடுத்து அனுப்பினான்.

தற்போது பணத்தை எண்ணிய படத் தலைப்புத் தலைவருக்கு இருப்பு கொள்ள வில்லை

“யோவ்…… ராமசாமி எங்க இருக்க?

“வீட்டுல”

“சீக்கிரம் வாய்யா”

“ஏன்”

“ஒண்ணும் தெரியாத மாதிரியே பேசாதய்யா”

அந்த புளிய மரம் படத்தலைப்பு விசயமா?”

“ஓ… அதுவா ….. எப்பவரணும்”

“ஒங்களுக்கு எப்ப சவுகரியம்”

“இப்பவே வாரேன்” ராமசாமி, உடனே புறப்பட்டார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ராமசாமி அங்கு வந்து சேர்ந்தார்.

“என்னய்யா…… டைட்டில் என்னாச்சு?

“ம்…. பெரிய டைட்டில் நீங்க கற்பனை பண்ணி எழுதி வச்சது?

என்னய்யா மரியாதை குறையுது. இது இன்னைக்குநேத்து நடக்கிற விசயமா? பதிவு பண்றது, காலமெல்லாம் இது தான நடந்திட்டு இருக்கு. நல்ல தலைப்பு வந்தா நம்ம பேர்ல முன்தேதி போட்டு எம்பேர்ல, இன்னும் எத்தனையோ நண்பர்கள் பேர்ல பதிவு பண்ணி வைக்கிறது வழக்கம் தானே. இதப் போயி பெருசா பேசிட்டு இருக்க? என்ற ராமசாமி எகிறினார்.

தன் பணத்தையும் தன்னுடைய படத்தலைப்பையும் பறி கொடுத்துவிட்டுச் சென்றான் ஆனந்த்.

ராமநாதனும் படத்தலைப்புத் தலைவரும் பணத்தை பிரித்துக் கொண்டனர்…..

அடுத்து நல்ல தலைப்பை எவன் கொண்டு வருவான் என்று வாய் பிளந்தது உட்கார்ந்திருந்தனர் தயாரிப்பு நிர்வாக அலுவலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *