சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

விழா முடிந்ததோ? இல்லையோ? தடபுடலாக பந்தி ஆரம்பம் ஆனது. அத்தனை ஆட்களும் வரிசையில் நின்று தங்களுக்குரிய தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். விழாவை விட பந்தி வாசனையாக இருந்தது. பதார்த்தங்களின் வாசனை அந்த அரங்கத்தை மேலும் வாசனையாக்கியது. எனக்கு போண்டா, எனக்கு சட்னி, எனக்கு உப்புமா என்று ஆளாளுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உயர்தர உணவை எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ? என்பதை அவர்கள் சாப்பிடும் தட்டை கணக்கு வைத்து பில் போடுவார்கள். ஒவ்வொரு தட்டும் […]

Loading

சிறுகதை

பெட்டிக்கடைக்காரன் – எஸ்.பாலகிருஷ்ணன்

வடிவேலு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர். அவன் இரவு நேரக் காவலாளியாக இருப்பதால் இரவில் பணி முடிந்து வரும் போதே வீட்டுக்கு பால்பாக்கெட் அவர் படிப்பதற்கு நியூஸ் பேப்பர் சோப்பு மற்றும் பலகாரங்கள் வாங்கி வருவார். இவைகளை வழக்கமாக தினமும் வாங்கி வருவார். பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள். வீட்டில் அவரின் மனைவியும் அத்தையும் இருக்கின்றனர். வடிவேலு இரவுப் பணிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். இவர் பணி முடிந்தவுடன் […]

Loading

சிறுகதை

சிவன் இணைந்த பெருமாள் …..!- ராஜா செல்லமுத்து

இப்படி ஒரு பெயரைச் சந்திரன் கேட்டதே இல்லை. சிவன் இணைந்த பெருமாள் சைவமும் வைணவமும் இணைந்த ஒரு பெயர். வைணவத்திற்குள்ளேயே வடகலை – தென்கலை என்று அடித்துக் கொள்ளும் இந்த உலகத்தில், சிவன் இணைந்த பெருமாள் என்ற பெயரைப் பார்த்ததும் சந்திரனுக்குத் தூக்கி வாரி போட்டது. அதுவும் ஒரு காவலரின் பெயர். காவல்த் துறையில் பணிபுரிந்து காெண்டிருப்பவரின் பெயராக இருந்தது அவரின் சட்டைப் பைக்கு மேலே இருந்த சிவன் இணைந்த பெருமாள் என்ற பெயரைப் பார்த்ததும் அதை […]

Loading

சிறுகதை

தாயின் வாசம்- ஆர். வசந்தா

அந்தக் கோவில் திருவிழாவில் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. தலைப்பு ‘தாய் பற்று – தந்தை பற்று’ என்பது தான். ‘தாய் பற்று’ சிறந்தது என்று சிலர் பேசினர். சிலர் தந்தையின் பாசமே உயர்ந்தது என சிலர் பேசினர். தாய் பற்றே என்று பேசிய ஒருவர் சொன்னார்: நம் நாட்டை தாய் நாடு என்று தான் சொல்வோம். பாரத மாதா என்று தான் உரைப்போம். நம் நாட்டின் நதிகளை கங்கை, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து என்று […]

Loading

சிறுகதை

தவிப்பு தணிந்தது – மு.வெ.சம்பத்

பள்ளிப் படிப்பு முடித்த தாரா கல்லூரிப் படிப்பில் சேர்ந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்தவர் முதலில் அந்த அறையை நன்கு தனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் சுத்தம் செய்தார். அப்போது அங்கு வந்த வார்டன் இந்த அறையில் இன்னும் ஒரு மாணவி வந்து தங்குவார் என்றதும் தாரா அறையின் ஒரு பகுதியில் ஐக்கியமானார். சற்று நேரத்தில் அங்கு வந்த கோகிலா மிகவும் படாடோமாக காணப்பட்டார். நுழைந்ததும் அவர் பின்னால் வந்த வார்டன் தாராவை நோக்கி இவர் […]

Loading

சிறுகதை

சிட்டுக்குருவி – ராஜா செல்லமுத்து

தொண்டை வறளும் வெப்ப வெளியில் நீண்ட தூரப் பயணம் செய்து களைத்து ஓய்ந்திருந்தன சிட்டுக் குருவிகள். மறுபடியும் தம் சின்னச் சிறகுகள் படபடக்க வெளி முழுதும் அலைந்து திரிந்தன. தாகம்;அலகு தொட்டு ஈரப்படுத்த எங்கும் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தண்ணீர் தேடி வட்டமடித்த சிட்டுக் குருவிகள் தம் சொந்த மொழியில் கீச்… கீச்… என்று கத்திக் கொண்டும் தம் சிறகுகளால் சிலிர்த்துக் கொண்டும் தண்ணீர் வேண்டிப் படபடத்தன. குஞ்சுக் குருவிகள் தண்ணீரில்லாமல் தவிக்கும் தவிப்பைப் பார்த்துக் கண்ணீர் […]

Loading

சிறுகதை

வட்டிக்குப் பணம் – எம்பாலகிருஷ்ணன்

‘‘கருப்பா நில்லு’’, என்கிட்ட கடன் வாங்கி நாலு மாசமாகுது. நீ ரெண்டு மாசம் ஒழுங்கா வட்டி கொடுத்தே; அதுக்கப் புறம் வட்டி தராம ஏமாத்திட்டு இருக்கே ஏன் என்று கருப்பனிடம் கேட்டார் வட்டிக்கு பணம் கொடுக்கும் மலையப்பன். அண்ணே கோவிச்சிக்காதீங்க; என்னோட பொண்டாடிக்கு உடம்புக்கு முடியல. ஆஸ்பத்திரி செலவு வந்திடிச்சி. இந்த ஒரு மாசமட்டும் பொறுத்துக்கங்க; அடுத்த மாசம் சேர்த்து கொடுத்துடுறேன் என பதில் சொன்னான். இந்த மாசமே வட்டியை கொடுக்க முடியல. அடுத்த மாசம் எப்படி […]

Loading

சிறுகதை

ஓர் ஓவியம் – ராஜா செல்லமுத்து

நூறடிச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது பொலிரோ கார் . எதிர் திசையில் இருந்த சிக்னல் விழ,சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தினார் ஓட்டுநர். ஆங்காங்கே வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த சிக்னலில் நின்று இளைப்பாறின. முன்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ஒரு இருசக்கரவாகனம் மோத ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம் ஓட்டியவனை தாறுமாறாகத் திட்டினான் ஆட்டோக்காரன் . யோவ்,எவ்வளவு தைரியம் இருந்தா வண்டியை இடிப்பே ? என்று ஆட்டோக்காரன் […]

Loading

சிறுகதை

ஏங்க… என்னங்க…!- ராஜா செல்லமுத்து

… ஏங்க சாப்பாடு எடுத்து வைங்க. நீங்க சாப்டீங்களா ? பிள்ளைங்க சாப்பிட்டார்களா? நான் வரணும் அப்படிங்கறதுக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம். நீங்க சாப்பிடுங்க. ஏன்னா நான் நைட்டு எத்தனை மணிக்கு வருவேன்னு எனக்கே தெரியாது.நான் சாப்பிட்ட பிறகு தான் நீங்க சாப்பிடணும் அப்படிங்கிற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உங்களுக்கு எப்ப பசிக்குதோ அப்ப நீங்க சாப்பிடுங்க என்று தன் மனைவி மணியம்மாளிடம் கரிசனையோடு சொன்னார் ராமசாமி. நீங்க வந்த பிறகு தான் […]

Loading

சிறுகதை

வேலைஇல்லாதவன் – எம்.பாலகிருஷ்ணன்

பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் கொந்தளித்தவனாக இருப்பான் கோவிந்தன். பின் இருக்காதா? கோவிந்தனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவனிடம் இரண்டு இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டவனாச்சே. பெருமாள் அரசாங்க அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறான். இவன் கோவிந்தனுக்கு ஆசை வார்த்தைகள் கூறினான். உனக்கு கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன். அதுக்கு நான்கு இலட்சம் செலவாகும் என்றுக் கூற கோவிந்தனும் அவன்கூறிய வார்த்தைகளை நம்பி பெருமாளிடம் முன் பணமாக இரண்டு இலட்சம் கடன் வாங்கிக் கொடுத்தான். […]

Loading