செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, நவ.28- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வி.பி.சிங்கின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. வி.பி.சிங்கின் உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி ஆகியோருடன் இணைந்து முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

ஐபிஎல் டி20 போன்று 16 அணிகள் பங்கேற்கும் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் 10 ஓவர் கிரிக்கெட் தொடர் அறிமுகம்

மும்பை, நவ. 28– ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போல ஐஎஸ்பிஎல் (இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்) 10 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் […]

Loading

செய்திகள்

நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்

சென்னை, நவ. 28– ‘சேரி’ என்ற வார்த்தையை குஷ்பு பயன்படுத்தியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா பற்றி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவுக்கு எதிராக பதிவிட்டவருக்கு அளித்த பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்தது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.ஆனால் ‘சேரி’ என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேஜஸ்சில் 30 நிமிடங்கள் பறந்து நவீனங்கள் கண்ட பிரதமர் மோடி ஆனந்தம்

* போர் விமானங்கள் தயாரிப்பில் புரட்சி * முற்றிலும் இந்தியர்கள் கைவண்ணம் ஆர்.முத்துக்குமார் ஒலியை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் சக்தி வாய்ந்த தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி அரைமணி நேரம் பறந்து மீண்டும் பத்திரமாக தரையிறங்கி இருக்கும் செய்தியும் தகவல்களும் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. தேஜஸ் போர் விமானத்தில் பறந்தபோது பிரதமர் மோடி தான் அனுபவித்த வெற்றி பயணத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்த செய்தி ‘இது […]

Loading

செய்திகள்

அமெரிக்க அதிபர் பிடன் அறிவுரையால் போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் இஸ்ரேல்

டெல் அவிவ், நவ.27– இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் நிம்மதியாக வாழ நீண்ட கால தீர்வை நோக்கி முன்னேறும்படி அமெரிக்க அதிபர் பிடனும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 7–ந்தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் இன்னும் சில […]

Loading

செய்திகள்

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க 31 மீட்டர் செங்குத்தாக துளையிடும் பணி நிறைவு

டேராடூன், நவ.27– உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் இதுவரை 31 மீட்டர் செங்குத்தாக துளையிடும் பணி நிறைவடைந்து உள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இன்று 16வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் மூலம் […]

Loading

செய்திகள்

டிசம்பர் 1–ந்தேதி முதல் மலேசியாவுக்கு விசா இல்லாமல் சீனா, இந்தியர்கள் பயணிக்கலாம்

சென்னை, நவ.27– டிசம்பர் 1ம் தேதி முதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:– சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, சீனா மற்றும் இந்தியாவையும் சேர்ந்தோர் இனி விசா இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம். இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசா இன்றி […]

Loading

செய்திகள்

குஜராத்தை கனமழை: மின்னல் தாக்கி 20 பேர் பலி

காந்திநகர், நவ. 27– குஜராத் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கி 20 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது மழை காலம் கிடையாது. இருந்த போதிலும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. இடி, மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

தொடர்மழை: சென்னை ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

10 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு கைவசம் சென்னை, நவ.27- சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை மாநகருக்கு அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான குடிநீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4–ந்தேதி துவங்குகிறது

புதுடெல்லி, நவ. 27– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4–ந்தேதி துவங்கி 22–ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் புதிய வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் […]

Loading