செய்திகள்

‘கேலோ இந்தியா’ போட்டிகள்: 26 தங்கம் உள்ளிட்ட 62 பதக்கத்துடன் மீண்டும் 2 வது இடத்தில் தமிழ்நாடு

சென்னை, ஜன. 27–

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளின் 9 வது நாளில் தமிழ்நாடு அணி 26 தங்கப்பதக்கங்களை பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் 2 வது இடத்தை பெற்றுள்ளது.

இந்திய ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 ந்தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு 2 வது இடம்

‘விளையாடு இந்தியா’ என்ற பெயரிலான இந்த போட்டிகள் தொடங்கிய 9 வது நாளில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 26 தங்கப் பதக்கம், 13 வெள்ளிப் பதக்கம், 23 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 62 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் 2 வது இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 28 தங்கம், 25 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியானா மாநிலம் 21 தங்கம், 13 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 64 பதங்கங்களுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளது. 4 வது இடத்தில் உள்ள பஞ்சாப், 8 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. 5 வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசம் 7 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளது.

6 முதல் 29 வரையான இடங்கள்

6 வது இடத்தில் உள்ள டெல்லி 7 தங்கத்துடன் மொத்தம் 25 பதங்கங்களையும், மணிப்பூர் 7 தங்கத்துடன் மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று 7 வது இடத்தையும், மேற்குவங்கம் 6 தங்கம் பெற்று மொத்தம் 17 பதக்கங்களுடன் 8 வது இடத்தையும் தெலங்கானா 6 தங்கத்துடன் மொத்தம் 12 பதங்கங்களுடன் 9 வது இடத்தையும் ராஜஸ்தான் 5 தங்கத்துடன் மொத்தம் 26 பதக்கம் பெற்று 10 வது இடத்தையும் பிடித்துள்ளது.

மத்திய பிரதேஷ் மொத்தம் 19 பதக்கமும், குஜராத் 16 பதக்கமும், ஒடிசா 12 பதக்கமும், உத்தரகாண்ட் 13 பதக்கமும், சண்டிகர் 15 பதக்கமும், கேரளா 15 பதக்கமும், கர்நாடகா 11 பதக்கமும், ஜம்மு காஷ்மீர் 6 பதக்கமும், ஜார்கண்ட் 4 பதக்கமும், பீகார் மாநிலம் மொத்தம் 3 பதங்கங்கள் என பெற்று, புள்ளிப்பட்டியலில் முறையே 11 முதல் 20 வது வரையான இடங்களை பிடித்துள்ளது. இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், டாமன் டயூ, மிசோரம், புதுச்சேரி மாநிலங்கள் புள்ளிப்பட்டியலில் 21 முதல் 29 வரையான கடைசி 9 இடங்களை பிடித்துள்ளது.

இந்த கேலோ இந்தியா போட்டிகளில் 26 விளையாட்டுகள் இடம்பெறுகிறது. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்களை பெற, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *