சிறுகதை

ஆய்வாளர் எண் – ராஜா செல்லமுத்து

நகரில் திரும்பிய திசை எல்லாம் அந்தப் பகுதி ஆய்வாளரின் எண் அதாவது காவல் துறை ஆய்வாளரின் எண் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது திருடர்களுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் தவறு செய்பவர்களுக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தியது.

சின்னச் சின்னத் திருட்டு செய்பவர்கள் கூட ஆய்வாளரின் எண் சுவர் முழுதும் எழுதி ஒட்டப்பட்டு இருப்பதை நினைத்து கொஞ்சம் கலக்கமடைந்தார்கள்.

இனித் திருடினால் இல்லை ஏதாவது ஒரு வீட்டில் அகப்பட்டால் உடனே ஆய்வாளர் எண்ணுக்கு போன் செய்று விஷயத்தை சொல்லி விடுவார்களோ என்ற பயம் திருடர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் குடைந்தது.

அந்த ஊரில் இருந்தவர்கள் எல்லாம் அதிலிருந்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

எந்தக் குற்றம் நடந்தாலும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக ஆய்வாளருக்குத் தெரியப்படுத்தி விடலாம் என்று மக்கள் அந்த ஊரிலிருந்து அனைத்து எல்லா மக்களிடமும் ஆய்வாளர் எண் பதியப்பட்டது.

அன்று சங்கர் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. எப்படியும் திரும்பி வருவதற்கு ஒரு மாதம் ஆகலாம் என்று நினைத்திருந்தான்.

மனைவி கூட கொஞ்சம் கலக்கப்பட்டுக் கேட்டாள்:

ஏங்க ஊருக்கு போய்ட்டு ஒரு மாசம் ஆகும்ல திரும்பி வர்றதுக்கு என்று கேட்டாள் மனைவி.

ஆமா, அதுக்கு என்ன இப்போ அதான் நான் ஆய்வாளர்கிட்ட சொல்லிட்டேனே என்றான் சங்கர்

என்ன சொல்றீங்க?ஆச்சரியம் கலந்து கேட்டாள் மனைவி

அதான் போலீஸ்காரர்ட சொல்லிட்டேனே . சார் நாங்க ஒரு மாசம் வீட்டில் இருக்க மாட்டோம் ;வீட்டில் கொஞ்சம் பணம் இருக்கு; கதவு கொஞ்சம் சரியில்ல. பின்பக்கமாக வீட்டுக்குள்ள யாரு வேணாலும் நுழைந்துந்துடலாம் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கங்க. ராத்திரி ரெண்டு மூணு டைம் வந்து போங்க .

நான் உங்களுக்கு உண்டான சன்மானத்தையோ இல்ல என்னால முடிஞ்சதையோ வந்து கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன் என்றான் சங்கர்

அய்யய்யோ அப்படியா சொன்னே என்றாள் மனைவி,

பதறி துடித்தவளை ஆறுதல் படுத்திய சங்கர்

ஏன் என்னாச்சு?. போலீஸ்ல தானே சொன்னேன். அதுக்கு என்ன இப்போ இவ்வளவு பதட்டப்படுற? என்றான் சங்கர்

உனக்கு விசயம் தெரியாதா? நீ எல்லாம் மனுசனா? இல்ல மாடாயா ஊர் பூரா எழுதி வச்சிருக்கிற நம்பர் உண்மையிலேயே போலீஸ்காரங்க நம்பர் இல்லையாம். எவனோ ஒருத்தன் எழுதி வச்சிருக்கானாம். அதை நம்பி நீ வேற யார்கிட்டயும் சொல்லிட்டியே ? இப்ப என்ன ஆகப்போகுதோ? என்று பதறித் துடித்து ஊருக்கு போன பாதி தூரத்தில் இருந்து திரும்பி வந்தார்கள்.

அப்போது சங்கர் வீட்டில் இருந்த அத்தனையும் லவட்டி கொண்டு சென்றிருந்தார்கள் ஆய்வாளர் எண்ணை பதிவு செய்திருந்த ஆட்கள் .

அப்போதுதான் உண்மையான ஆய்வாளர்களுக்கும் தெரிந்தது. காவல் துறை பெயரைப் பயன்படுத்தி நூதனமான மோசடியா இருக்கே . யாரு கேப்பாங்கன்னு தானே இத செஞ்சிருக்காங்க.

அவனுக யாருன்னு விடக்கூடாது. அவனுகள பிடிங்க

என்று போலீஸ்காரர்கள் கிளம்பினார்கள்.

அந்த எண்ணில் உண்மையான ஆய்வாளரே தொடர்பு கொண்ட பொழுது அந்த எண் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது.

சுவரில் எழுதி இருந்த எண்களை எல்லாம் அளித்தார்கள்.

உண்மையான காவல் துறை நம்பரை எழுதி வைத்து இதுதான் காவல்துறை ஆய்வாளரின் உண்மையான எண் என்று ஊரெல்லாம் ஒளிபரப்பும் செய்தார்கள் .

ஆனால் அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை .

இன்னொரு ஊரில் வேறொரு கும்பல் காவல்துறை ஆய்வாளர் எண் என்று எழுதப்பட்டது. அந்த எண்ணை குறித்துக் கொண்ட மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்

அதில் சில நல்ல விஷயங்களும் நடந்தேறின.

போகப் போகத்தான் தெரியும் ஆய்வாளர் எண்ணின் ஆச்சரியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *