செய்திகள்

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை, நவ. 3–

தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரத்தை சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என நான்கு நிறங்கள் மூலம் வானிலை ஆய்வு மையம் உணர்த்துகிறது. இவற்றில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் வானிலை மோசமாக உள்ளது, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *