செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னை, டிச. 12–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அண்மை காலமாக ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. முன்னர் உக்ரைன்–ரஷ்யா போர் காரணமாக விலை ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முற்று பெறவில்லை என்றாலும், இப்போது பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் காரணமாக, மீண்டும் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டது.

சவரனுக்கு ரூ.240 குறைவு

இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *