சிறுகதை

உன் வாழ்க்கை உன் கையில் – எம்.பாலகிருஷ்ணன்

மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தவனை அவன் நண்பன் செல்வன் பார்த்து என்னடா மோகா ஏன் கவலையாக இருக்கிறே? எனக் கேட்க அதற்கு மோகன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மறுபடியும் அவன் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? என்னடா ஆச்சி வீட்ல பிரச்சனையா? எங்கிட்ட சொல்ல மாட்டியா? இன்று செல்வன் அதட்டலாக கேட்டதும் மோகன் மெல்ல வாய் திறந்தான்.

மனசே சரியில்லடா செல்வா நிம்மதியா தூங்க முடியல என்று பதில் சொல்ல அதற்கு செல்வம் ஏண்டா என்ன பிரச்சனை கேட்கிறேனே சொல்லுடா வீட்ல அப்பாவுக்கும் உடம்புக்கு முடியல அம்மாவுக்கும் முடியல. எனக்கும் வேலை இல்ல தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கல வாழ்க்கையே வெறுத்துப் போச்சி பெரிய போராட்டமா இருக்குடா. ஏன் தான் கடவுள் இப்படி சோதிக்கிறாரோ? வாழ்றதுக்கு விருப்பமில்ல என்று விரத்தியாக பேசினான்.

அதற்கு செல்வம் ஏன்டா விரக்தியா இப்படி பேசுற? என்று செல்வன் கேட்டான்.

இருக்கிற பிரச்சினையில் எப்படி சந்தோசமா பேச முடியும்? தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனையா எனக்கு வந்துகிட்டு இருக்கு . என்னால் எப்படிச் சமாளிக்கிறது? படபடவென்று பேசினான் மோகன் .

பேசிட்டாயா மோகா? நான் பேசலாமா? இப்ப யாருக்குத்தான் பிரச்சனை இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்று பதில்சொல்ல

‘‘இருந்தாலும் எனக்கு மட்டும் பிரச்சனை மேல பிரச்சனையா தானே இரயில்பெட்டி மாதிரி வரிசையாக வந்து நிக்குது,’’

‘‘டேய் மோகன் பிரச்சனையே இல்லாத மனிசனக்காட்டு. சிலருக்கு சின்ன பிரச்சனையா வரும்; சிலருக்கு பெரிய பிரச்சனையா வரும் அவ்வளவுதான்.

இன்னொரு விஷயம் சொல்றேன்: மனுசன் வாழுற வரைக்கும் பிரச்சனைகள் வந்துகிட்டுதான் இருக்கும். அதை எப்படி சமாளிக்கிறது அதில் தான் நம் திறமை இருக்கு என்றான் செல்வன் .

ஆமாம்டா இல்லையின்னு சொல்லல. எனக்கு வந்த பிரச்சனை– உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தாளத்திற்கு இரண்டு பக்கம் இடி. எனக்கு மட்டும் நாலு பக்கம் இடி. சின்ன பிரச்சனையா இருந்தால் சமாளிக்கலாம்; கழுத்தைலே நெரிக்கிற மாதிரி தானே எனக்கு வருது என்று மோகன் சொன்னான்.

இதைக்கேட்ட செல்வன் முதல்ல நான் சொல்றத அமைதியா கேளு .வா இப்படி உட்கார் என்று மோகனை அவன் அருகில் உட்கார வைத்துப் பேசினான்.

நீயும் நானும் காலேஜில ஒன்னா படிச்சோம் படிப்ப முடிச்சதும் எங்கப்பா அரசாங்க வேலை பார்த்து அவர் சர்வீஸ் முடிய அஞ்சி வருசம் இருக்கும் போதே திடீரென்று ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு. உங்கப்பா தனியார் கம்பெனியில் வேலை பாத்து ரிட்டையரானாரு. அவர் வேலை பாத்த கம்பெனில ஏதோ கொஞ்சம் பணம் வந்ததுனால. குடும்பத்தையும் காப்பாத்தி உன்னையும் உன் தங்கச்சியையும் படிக்க வச்சாரு . இப்ப உங்க அப்பா அம்மாவுக்கு வயசு ஆனதுனால அப்பப்ப உடம்புக்கு முடியல . இது யதார்த்தம். உன்னோட தங்கச்சி.யின் கல்யாணத்துக்கு இப்பதைக்கு மாப்பிள்ளை அமையல. இதுவும் யதார்த்தமான விசியம் இப்பத்தான் நான் விசியத்துக்குவர்றேன். நீ படிப்ப முடிச்ச உடனே வேலைக்கு பல எக்ஸாம் எழுதிட்டு இருக்க. இன்னும் எழுதிட்டுந்தான் இருக்கே. ஆனா உனக்கு வேலை கிடைக்கல இதுல உன்மேல தப்பில்ல.

நீபடிச்ச படிப்புக்கு தகுந்த மாதிரி அரசாங்க வேலையோ இல்ல ஐடி கம்பெனி வேலை ஒரு பெரிய கம்பெனியில்ல வேலையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்கே. இந்த இடத்தில் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக் கூடாது என்றான் .

என்ன சொல்லுடா என்று மோகன் கேட்டான்.

நீ ஆசைப்பட்ட வேலை கிடைக்கிற வரைக்கும் அதாவது உன் படிப்புக்கு தகுந்த வேலை வர்றவரைக்கும் ஏன் நீ கிடைக்கிற வேலைக்கு போகக்கூடாது? எனக்கேட்டான்.

அதற்கு மோகன் நீ சொல்ற மாதிரி கிடைக்கிற வேலைக்குப் போனாலும் ரொம்ப குறைஞ்ச சம்பளம் தானே கிடைக்கும் . அதை வச்சி நான் குடும்பத்தை காப்பாத்தி தங்கச்சிக்கு எப்படி கல்யாணம் பண்றது? எனக் கேட்டான் மோகன்.

உன் தங்கச்சியை இப்போதைக்கு ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு வேலைக்கு அனுப்பு.

கல்யாணம் ஆகுற வரைக்கும் வேலைக்குப் போனால் அதுல வர்றவருமானம் குடும்பத்துக்கு உதவுமே. நீங்க ரெண்டு பேரும் கிடைக்கிற வேலைக்குப் போய் குடும்பத்தையும் உங்க அப்பா அம்மாவையும் கவனிக்கலாமல்லவா?

மோகன் ஒரு கணம் யோசித்தான். இதைப் புரிந்து கொண்ட செல்வம் புரியுதடா

மோகா, என்னடா இவ்வளவு படிப்பு படிச்சி நாம எப்படி குறைவான சம்பளத்தில் வேலைக்கு போறது அப்படின்னு யோசிக்கிறியா? டேய் …ஒன்ன நல்லா தெரிஞ்சுக்க. வாழ்க்கையில் நாம விரும்புறது கிடைச்சா சரி. கிடைக்கலன்னள கிடைக்கிறத ஏத்துக்கணும். பிரச்சனையில ரெண்டு விதம் ஒன்னு எதிர்பாராதது நடக்கிறது. பிரச்சனை நாம் தடுக்க முடியாது இன்னொன்று நாமளே சமாளிக்கிற பிரச்சனை உனக்கு ரெண்டுவது ரகம் பிரச்சனை.

நீயே சரி பண்ணக்கூடியது தான் நம்ம குடும்பத்த காப்பாத்துறதுக்கு நம்ம தகுதியைப் பார்க்கக்கூடாது. அதுல தப்பே இல்ல என்றான் செல்வன்.

செல்வன் சொன்ன வார்த்தைகள் மோகனுக்கு சரியெனப்பட்டது அவன் மனம் சற்று லேசானது பிறகு செல்வம் மோகன் முகத்தை பார்த்தான் அவன் முகம் அமைதியாக இருந்தது. அதன் பின் பேசத் தொடங்கினான். மனிசனுக்கு பிரச்சனை வந்தால் புடம் போட்ட தங்கமா ஆகுவான் தங்கத்தை நெருப்புல வாட்டி எடுத்தால் பிரகாசமாக ஜொலிக்கும். அதுபோல் பிரச்சனை மனுசனுக்கு வந்தால் தான் அவனுக்குள் இருக்கிற திறமை வெளிப்படும். அவனுக்கு இருக்கிற சக்தி வெளிப்படும்.

பிரச்சனைகள் வந்தால் தான் மனுசன் பக்குவமாவான் ; வாழ்க்கையின்னா என்னவென்று புரியும். பட்டாம்பூச்சி பறக்கப் பறக்கத்தான் அழகா தெரியும் . மனுசனுக்கு பிரச்சனைகள் வந்தால் தான் தன்னுடைய சுயபலம் தெரிஞ்சு அவன் சுறுசுறுப்பாக தெரிவான்; மேல்மட்டத்திற்கு போகனுமுன்னுனு உந்துதல் வெறி அவனுக்குப் ஏற்படும்; பிரச்சனைகளை நாளடைவில் வெல்லமுடியும். பிரச்சனைகளை வெல்ல வெல்ல மன உறுதி கிடைக்கும். கடைசியில் வாழ்க்கையில் வெற்றியாளராக வருவான்.

பிரச்சனைகளை அதைச் சவால் என்று நினைக்க வேண்டும். அதனால பிரச்சனைகள் வரவர அவன் முழுதைரியமாக இருக்க வேண்டும். பிரச்சனையா நாமாளா என்று ஒரு கை பார்க்க வேண்டும். பிரச்சனைகளை கண்டு பின்வாங்ககூடாது. அவை நம்மை கண்டு பயந்து ஒட வேண்டும். பிரச்சனைக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும். அவற்றை சமாளிக்க நமது அறிவு நமக்கு துணை நிற்கும். அறிவையும் தைரியத்தையும் வைத்து எவ்வளவு பெரிய பிரச்சனையும் தீர்க்க முடியும். அதற்கு நம்ம கிட்ட தன்னம்பிக்கை வேணும் கடவுள் நம்பிக்கை என்பது அவரவர்கள் நம்பிக்கையை பொறுத்தது. நம்ம வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது. உயர்வுக்கும் தாழ்விற்கும் நாமே பொறுப்பு . மனசில நாம என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் முடியும் என்று நாம நினைச்சா நிச்சயம் முடியும். முடியாது என்று நினைச்சால் அதுபோல தான் நடக்கும்.

சுவாமி விவேகானந்தர் சொன்னார்: நீ என்ன நினைக்கிறாயோ அதுபோல் ஆவாய் உன்னை அறிவாளி என்று நினைத்தால் அறிவாளியாவாய் உன்னால் முடியும் என்று நினைத்தால் அது முடியும். நீ பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப் பிறந்தவன் . தைரியமாக எழுந்து நில்லுங்கள் ; போராடுங்கள் வெற்றி என்னைத்தேடிவரும் என்று நமக்கு விவேகமாக அறிவுரை கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அவன் தன் சட்டைப் பையிலிருந்த துண்டு சீட்டை எடுத்து மோகனிடம் நீட்டினான். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. அவை கவிதை போல் மோகனுக்கு இருந்தது

புயலாய் சீறிவரும் பிரச்சனையே

உன்னைத் தென்றலாய் மாற்றி விடுவேன்;

தீயாய்தீண்ட வரும் பிரச்சனையே

உன்னை நீராய் மாற்றி விடுவேன்!

எரிமலையாய் வெடிக்க வரும் பிரச்சனையே

உன்னை பனிமலையாய் மாற்றி விடுவேன்!

உன்னை வேண்டாமென்று விரட்டினாலும்

நீ வேண்டாத விருந்தாளியாய்

என்னிடம் ஒட்டிக் கொள்கிறாய்

நீ அடிக்கடி வருவதால் எதிரியாய் இருந்த நீ

இப்போது என் நண்பனாய் ஆகிவிட்டாய்

நீ என்னுடன் இருப்பதால்

நான் ஆற்றல் படைத்தவனாய் மாறிவிட்டேன் .

பிரச்சனையே நீ பிரச்சனையே அல்ல; சவால்கள் –

சவால்களை வெல்லும் சக்தியை

நீயே எனக்குக் கொடுத்து விட்டாய்.

உளிதரும் வலியால் கல்லில் சிலையாகிறது ;

நெருப்பில் சுட்டத் தங்கம் புதுப் பொலிவாய் ஜொலிக்கிறது ;

தோண்டி சிதைக்கப்பட்ட மண் உழுவதற்கேற்ற நிலமாகிறது;

முள் செடியிலே தான் வாசமுள்ள ரோஜா மலர்கிறது;

ஆதாலால் துன்பங்கள் தாம் மனம் உறுதியாக்கப்படுகிறது ;

பிரச்சனைகள் தாம் சாதனை படைக்கத் தூண்டுகிறது

இதைப் படித்த மோகன் செல்வனை கட்டி அணைத்துக் கொண்டான். ஆயிரம் ஆற்றல் மோகனை வழிநடத்தத் தொடங்கியது.

மோகன் தான் கிடைத்த வேலையில் சேர்ந்தான்.; தங்கைக்கு வேலை வாங்கிக்கொடுத்தான் ;

அவர்கள் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்தது. ….உயர்ந்தது. …. உயர்ந்துகொண்டே போனது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *