சிறுகதை

தள்ளுபடியில் பிரியாணி – ராஜா செல்லமுத்து

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணிக் கடையில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது.

100 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி என்ற அறிவிப்பு அந்தப் பகுதி மக்களையே சந்தோஷத்திற்கு உள்ளாக்கியது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டால் தப்பில்லை; நாளையிலிருந்து சைவத்தை கடைப்பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

புரட்டாசி மாதம் என்பதால் பிரியாணி சாப்பிட மாட்டார்கள் என்று தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள்.

சரி இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணி சாப்பிட்டுட்டு நாளைக்கு இருந்து புரட்டாசி விரதம் இருக்கலாம் என்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.

இப்படி ஆளாளுக்கு பேசிக்கொண்டு இருந்தாலும் பிரியாணி வியாபாரம் களை கட்டிக்கொண்டு தான் இருந்தது.

100 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி என்பதால் சாப்பிடுபவர்கள், பார்சல் வாங்கிப் போவர்கள் என்று பிரியாணி கடை முழுவதும் கூட்டம் ஸ்தம்பித்தது ..

முண்டியடித்து வாங்கும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ்காரர்கள் காவலுக்கு வந்து விட்டார்கள்.

அதில் கம்பை சுழற்றிய ஒரு காவலர் காஞ்சு போய் கிடக்கிற நேரத்துல 100 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி போட்டா கூட்டம் வரத்தான் செய்யும் அதுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை நீ போட்டிருக்கணும் .

இப்ப பாரு எவ்வளவு கூட்டம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டா யார் காரணம் என்று ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி பிரியாணியைக் கவனித்தார்கள்.

கட்டுப்படுத்தும் காவலர்கள் சைடு கேப்பில் அவர்களுக்குமான விஷயத்தை பிரியாணி கடைகாரரிடம் சொன்னார்கள். நமக்கும் பத்து பிரியாணி பார்சல் பண்ணி வை போகும்போது எடுத்துட்டு போறோம் என்று சொல்ல

சார் உங்களுக்கு இல்லாத பிரியாணியா? என்று சொன்னான் பிரியாணிக் கடைக்காரன்.

கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி நின்றது. வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர் சீக்கிரம் பிரியாணி குடுங்க வாங்கிட்டு நான் ஊருக்கு போகணும் என்றார்

அவர் முன்னால் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளர்

சார் 100 ரூபாய்க்கு ரெண்டு பிரியாணி அப்படின்னு ஊர்ல இருந்து வந்தீங்களா ? என்று கேட்க

ஆமா என்று சந்தோசமாக தலையாட்டினார்

எங்கிருந்து சார் வந்தீங்க? என்று அவரின் முன்னால் இருந்தவர் கேட்க வீட்டில் டிவி பார்த்துகிட்டு இருந்தேன். 100 ரூபாய்க்கு இரண்டு பிரியாணின்னு சொல்லவும் மெட்ராஸ்ல இருந்து வந்துட்டேன் என்று சொன்னதைக் கேட்ட வாடிக்கையாளர்கள் வாய் பிளந்தார்கள் .

காஞ்சிபுரத்தில இருக்கிற கடைக்கு மெட்ராஸில் இருந்து பிரியாணி வாங்க வந்த ஒரே ஆளு நீதாயா. இந்த மனுஷங்களுக்கு இலவசமா தள்ளுபடியில எது கொடுத்தாலும் எங்கிருந்தாலும் வாங்கிட்டு போயிடுவாங்க போல .நூறு ரூபாய்க்கு இரண்டு பிரியாணி வாங்குறதுக்கு 500 ரூபாய் செலவழிச்சு காஞ்சிபுரம் வந்தத நான் பார்த்ததில்லையா?

தமிழ்நாடு விளங்கிரும் என்று சொல்ல ஐயா இந்தாங்க நூறு ரூபா ரெண்டு பிரியாணி குடுங்க பஸ்சுக்கு நேரமாச்சு என்று சென்னையில் இருந்து வந்த வாடிக்கையாளர் பிரியாணியை வாங்கிக் கொண்டு அவசரமாகக் கிளம்பியவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்

அவரை சுற்றி நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *