செய்திகள்

உலகின் மகிழ்ச்சியான நாடு: 126-வது இடத்தில் இந்தியா

ஆக்ஸ்போர்டு, மார்ச் 21–

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126வது இடத்தை பிடித்துள்ளது.

அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்தையும், நேபாளம் 93வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும் பெற்றுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சி குழு இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வானது, ஒவ்வொரு நாடுகளின் ஜிடிபி, தனிப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை, உடல்நலன், சுதந்திரம் உள்ளிட்டவை அடிப்படையில் நடத்தப்பட்டது.

இதில் தொடர்ந்து 7வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல், நெதர்லாந்து, நார்வே, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் முறையே முதல் 10 இடங்களை பெற்றுள்ளது. உலகின் பெரிய நாடுகள் எதுவும் முதல் 10 இடங்களை பெறவில்லை.

இந்தப் பட்டியலில் இந்தியா கடந்தாண்டு பெற்ற 126வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவை விட லிபியா, ஈராக், பாலஸ்தீனம் மற்றும் நைஜர் போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் டாப் 20 பட்டியலில் இருந்த அமெரிக்கா தற்போது 23வது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும் உள்ளது. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *