நாடும் நடப்பும்

இன மத பிரிவினையின் சின்னமாக இருந்த பெர்லின் சுவர் நொறுங்கிய வரலாறு


ஆர்.முத்துக்குமார்


300 ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டை சுதந்திர நாடாக மாற்றிய பல தலைவர்களில் பிரதானமானவர் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரத்தை பெற சத்தியாகிரகம் என்ற அறவழி ஆயுதத்தை பயன்படுத்திய உலகின் முன்மாதிரித் தலைவரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை அக்டோபர் 2 அன்று நாடே கொண்டாடும் நேரத்தில் சர்வதேச தலைவர்கள் அந்நாளில் வன்முறையை கண்டிக்கும் நாளாக அனுசரிப்பதை அறிவோம்.

அடுத்த நாள், அக்டோபர் 3 – ஜெர்மன் மறு ஒருங்கிணைப்பு தினமாக உலக நாடுகள் அனுசரிக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் இணைந்து பெர்லினை தலைநகராக அறிவித்து இணைந்து செயல்பட துவங்கிய வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாக இருந்த கிழக்கு இந்தியா பிரிந்து பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. பாக் என்றால் ஆன்மீக ரீதியாக தூய்மையானோர், சுத்தமானோர் என்பதாகும்.

நம் நாடு இரண்டாக பிரிந்த பிறகு ஏற்பட்டு வரும் இன, மத பிரிவினைவாதம் உலக அரங்கில் நம் இரு நாடுகளுக்குமே பாதகமானதாகவே இருப்பது தான் உண்மை.

பாகிஸ்தானின் பொருளாதார சீரழிவுக்கு காரணங்கள் பல என்று கூறிவிடலாம்; ஆனால் அவர்களின் வளர்ச்சியைக் காண ஆசைப்படும் சமத்துவம், சகோதரத்துவம் நம்மிடம் சற்றுகூட துளிர்விட முடியாத ஓர் இறுக்கமான மனநிலை நம்மை சூழ்ந்துள்ளது.

இருதரப்பு அரசியல் தலைவர்களும் மற்றவரை குறை கண்டு பேசியே அரசியல் ஆதாயம் பெற்று வருவதால் உடனடி நன்மைகள் அவர்களுக்கு இருப்பதால் பிரிவினை சக்திகளின் ஆதிக்கம் உடும்பு பிடியாய்ப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.

ஜெர்மனி பற்றிய வரலாற்றுப் பக்கங்களில் புரட்சி என்ற வார்த்தையின் உபயோகமே பத்திக்குப் பத்தி 1990 வரை இருப்பதை பார்க்க முடிகிறது!

நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருகாமை நாடுகளுடன் சண்டை சச்சரவுகளில் மாண்டவர்களில் அதிகமானோர் அப்பாவி சாமானியர்களே! ஹிட்லர் 1930களில் ஏற்படுத்திய கிலியையும் வலிமையையும் வர இருக்கும் பல தலைமுறைகள் அச்சத்துடனே படித்து தெரிந்து கொள்ளும்.

1830களில் டேனிஷ் மற்றும் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கத்தால் பொருளாதார சீரழிவையும் அரசியல் கலகங்களையும் சந்தித்து ஜெர்மனி படுவீழ்ச்சி அடைந்து இருந்தது. 1871–ல் தான் அந்நாட்டு பிரதமர் ஆட்டோவான் பிஸ்மாக் 7 ஆண்டு யுத்தத்தை நடத்தி ஆஸ்திரியா, டேனிஷ் மற்றும் பிரெஞ்சினரின் ஆதிக்கத்தில் இருந்து தப்பித்து சுதந்திர ஜெர்மனியை உருவாக்கினார்.

ஆஸ்திரியா நாடும் உடன் இருந்ததால் அந்நாட்டு குடிமக்கள் ஜெர்மனியின் புதிய சகாப்தத்தில் பின்தங்கி விடுவோமோ? என்ற அச்சத்தில் இருந்தது நியாயம் தானே. அந்நாட்டு இளைஞர்கள் பல வழிகளில் ஜெர்மனியின் ஆட்சியை வசப்படுத்தத் துடிதுடித்தனர்.

ஹிட்லர் 1933 முதல் 1945–ல் தற்கொலை செய்து கொண்டது வரை சர்வாதிகார ஆட்சியை இரும்புக்கரம் கொண்டு நடத்தியது வரலாற்றின் கறுப்பு அத்தியாயம்.

கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் ஜெர்மனிக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை என்று துவங்கிய சண்டை சச்சரவுகள் மத, இன போராகவும் மாறி பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, சோவியத் ரஷ்யா மீதும் ராணுவ தாக்குதல்களை நடத்தினார்.

இதனால் ஐரோப்பிய நாடுகள் ஓரு முகமாகவும் இணைந்து ஹிட்லரின் சர்வாதிகார அடக்குமுறையை எதிர்த்து இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தி ஒருவழியாக இப்பிரதேசத்தில் அமைதி திரும்ப வழியையும் கண்டது.

யூதர்கள் தான் எனது எதிரிகள் என பல லட்சம் யூதர்களையும் அவர்களது உயரிய சிந்தனைகள் கொண்ட புத்தகங்கள் என அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிய ஹிட்லர் உள்நாட்டிலும் மதிக்கப்படாத தலைவராக மாறினார்.

ஆகையால் ஜெர்மனி யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாத இரு பிராந்தியங்களாக பிரிந்து விட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே 155 கிலோ மீட்டர் கொண்ட பெர்லின் சுவர் 1961ல் கட்டப்பட்டது.

அதுவே இருநாடுகளின் எல்லையாக நம்வர் 9, 1989 வரை இருந்தது.

மேற்கு பெர்லினில் இருந்து கிழக்கு பெர்லினுக்கு வரவிடாமல் தடுக்கவே இந்த ‘மண்ணாங்கட்டி’ சுவர்! மக்கள் மனதால் ஒன்றிணைந்ததால் தடுப்புச்சுவரைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கி உடைத்து நொறுக்கி விடலாம் என்று உலகிற்கு எடுத்துரைத்த நன்னாள் 1989 நவம்பரில் நடைபெற்றாலும் இதை சர்வதேச தலைவர்கள் ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்து பாராட்டினாலும் இணைந்த பெர்லின் தலைநகர் உதயமானது அக்டோபர் 3, 1990ல் ஆகும்.

ஆக அன்பையும் நன்மையையுமே செய்யுங்கள் என போராடி சுதந்திர இந்தியாவை உருவாக்கிய காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடிய மறுநாள் இனம், மதம் எல்லாம் சுவாராய் நம்மை பிரித்து இருப்பதால் என்ன பயன்? என உணர்ந்து அந்த பெர்லின் சுவரை தவிடுபொடியாக்கிய கையோடு அரசியல் சிந்தனையிலும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை உலகம் கொண்டாடுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *