செய்திகள்

இணையவழிக் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகள்: 10 வது இடத்தில் இந்தியா

டெல்லி, ஏப். 12–

இணையவழிக் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் 100 நாடுகளில், இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.

உலகில் உள்ள 100 நாடுகளில் சைபர் கிரைம் எனப்படும் இணையம் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் உலக இணையக் குற்ற குறியீடு என்ற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் ரஷ்யா

இந்தியாவில் இணையவழியில் முன்பணம் செலுத்தினால் அதிகப் பணம் அல்லது பரிசு கிடைக்கும் என்ற மோசடி அதிகளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வழிகளில் சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி அதிக சைபர் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் முதல் இடத்தில் ரஷ்யாவும், 2 வது இடத்தில் உக்ரைனும், 3 வது இடத்தில் சீனாவும் உள்ளன. இதனை தொடர்ந்து அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா, வடகொரியா, பிரிட்டன், பிரேசில் ஆகியவை 4 முதல் 9 இடங்களைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *