செய்திகள்

எடப்பாடி நடத்திய பொதுக்குழு செல்லும்: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தொண்டர்கள் உற்சாகம், இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

சென்னை, செப்.2–

ஜூலை 11–ந் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஏற்கனவே தீர்ப்பு அளித்த தனிநீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீண்டும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார்.

அண்ணா தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

இன்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா தி.மு.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சென்னை அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டு முன்பு அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் பெருமளவில் குவிந்தனர். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து, சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.