செய்திகள்

ராகுலிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து போராட்டம்

டெல்லியில் ஜோதிமணி எம்.பி. கைது புதுடெல்லி, ஜூன் 15– ராகுல் காந்தியிடம் 3–வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை நேற்று இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. 2-வது நாளில் நேற்று 8½ மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்காக, […]

செய்திகள்

ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவ மக்கள் நீதி மய்யத்தின் கமல் குருதிக்கொடை குழு

சென்னை, ஜூன் 15- “ரத்தம் தேவைப்படுவோர் எளிதாக எங்களைத் தொடர்புகொள்ளும் பொருட்டு Kamal’s Blood Commune உருவாக்கியுள்ளோம். உதவிக்கு 9150208889 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற […]

செய்திகள்

லாலு கட்சி சார்பில் எம்எல்சியாக தலித் பெண் சலவை தொழிலாளி

பாட்னா, ஜூன் 15– பீகார் சட்ட மேலவை(எம்எல்சி) தேர்தலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சலவை பெண்ணான முன்னி ரஜாக்கை ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சமீப காலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே உரசல் போக்கு உள்ளது. இங்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. லாலு பிரசாத்தின் மகன் […]

செய்திகள்

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவுக்கு 2வது இடம்

புதுடெல்லி, ஜூன் 15– ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் மிக அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகள் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறி உள்ளது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 8.19 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளன. கடந்த காலங்களில் இறக்குமதி செய்த அளவைக் காட்டிலும் இது மிக அதிகமாகும். அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து […]

செய்திகள்

நாட்டிலேயே முதன் முறையாக கோவையிலிருந்து ஷீரடிக்கு முதல் தனியார் ரெயில் சேவை

கோவை, ஜூன் 15– ‘பாரத் கவுரவ்’ ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டில் முதல் தனியார் ரயில், கோவையிலிருந்து ஷீரடிக்கு நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்தியாவில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் ‘பாரத் கவுரவ்’ ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் எனவும், இந்த ரயில்கள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மட்டுமல்லாது, தனியாராலும் நிர்வகிக்கப்படும். குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியார் மேற்கொள்ளலாம் என ரயில்வே சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் […]

செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை, ஜூன் 15– விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக குடும்ப தலைவிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்று மதுரையில் […]

செய்திகள்

எல்.ஐ.சி.யின் புதிய ‘தன் சஞ்சய்’ காப்பீட்டு திட்டம் அறிமுகம்

சென்னை, ஜூன் 15– எல்.ஐ.சி. ‘தன் சஞ்சய்’ என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உள்ளது. இந்த புதிய பாலிசி உத்தரவாதமிக்க வருவாய் பலனையும் கொண்டுள்ளது என்று எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– எல்ஐசி நிறுவனம் சார்பில் ‘தன் சஞ்சய்’ என்ற பெயரில் பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர், சேமிப்பு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பாலிசிதாரர்களுக்கு […]

செய்திகள்

தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னை, ஜூன் 15– தங்கத்தின் விலை இன்று ரூ.200 குறைந்து ரூ.37,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 குறைவு அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, சவரன் 37,720 ரூபாய்க்கு விற்பனை […]

செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 104 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

ராய்ப்பூர், ஜூன் 15– சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர். சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. இவர் தனது வீட்டின் பின்பு 80 அடி ஆள ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்து இருந்தார். அதன்மூலம் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றிய நிலையில், போர்வெல் […]

செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: மம்தா அழைப்பை புறக்கணித்த சந்திரசேகர ராவ், கேஜ்ரிவால்

டெல்லி, ஜூன் 15– ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் 16 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ந் தேதி நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜ தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுதொடர்பாக உட்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ஆதரவை திரட்ட ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் […]