செய்திகள் நாடும் நடப்பும்

கருப்பு பணமும், தேர்தல் நன்கொடையும் ரத்து செய்து விட்டது உச்சநீதிமன்றம், திணறுகிறது அரசியல் கட்சிகள்

ஆர்.முத்துக்குமார் பல ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நேரத்தில் நிதி தருவது வாடிக்கை. வெளிப்படைத் தன்மையோடு அப்படி ஒரு நிறுவனம் தரும்போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் தங்களை குறி வைத்து பல தொல்லைகள் தரும் என்று கூறி எந்த அடையாளமும் வெளிப்படாமல் அப்படி நிதி உதவிகள் செய்ய சட்டப்பூர்வ அனுமதிகள் இருக்கிறது. மேலும் ஒரு நிறுவனம் பல கட்சிகளுக்கு நிதி தரவும் முன் வருவதுண்டு. ஆனால் நம் நாட்டில் அதற்கு ஏற்ற […]

Loading

செய்திகள்

7வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: 26–ந்தேதி ஆஜராக வலியுறுத்தல்

புதுடெல்லி, பிப். 22– டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் இம்மாதம் 26–ந்தேதி ஆஜராகும்படி தெரிவித்துள்ளது. டெல்லியில் முதமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கெஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் […]

Loading

செய்திகள்

பேருந்தில் இறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை கீழே இறக்கிவிட்ட நடத்துநர், ஓட்டுநர் இடைநீக்கம்

தருமபுரி, பிப். 22– அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த மு. பாஞ்சாலை (வயது 59) என்பவர் அரூர் நகரத்திலிருந்து நவலை கிராமத்தில் அவரது அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம். வழக்கம் போல் மாட்டிறைச்சி வாங்கி […]

Loading

செய்திகள்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தை

ஐதராபாத், பிப். 22– ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனையை செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. உலகில் எத்தனையோ நபர்கள் தினம் தினம் பல வகையான சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறனர். அப்படி, ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சாதனையை செய்து உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. காய்கறிகள், விலங்குகள், பறவைகள் என 120-க்கும் […]

Loading

செய்திகள்

2 நாட்களுக்கு டெல்லி சலோ போராட்டம் நிறுத்தம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை, பிப்.22 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை (டெல்லி சலோ) 2 நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், கடந்த 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டெல்லி சலோ’ எனப்படும் டெல்லியை நோக்கி என்ற […]

Loading

செய்திகள்

விவசாயிகளின் சமூக ஊடகங்களை முடக்கியதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் தளம் அறிவிப்பு

டெல்லி, பிப். 22– விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பல கணக்குகள் ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என எக்ஸ் தளம் தெரிவித்துள்ளாது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் பிப்ரவரி 13 ந்தேதி தொடங்கி, இன்று 10-வது நாளாகப் பஞ்சாப்-அரியானா எல்லையில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசுகளுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பான கணக்குகள் […]

Loading

செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்: 26–ம் தேதி திறப்பு

அனைத்து கட்சிகளுக்கும் சட்டசபையில் அழைப்பு சென்னை, பிப்.22– சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் திறப்பு விழா வரும் 26–ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதுபற்றி சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:– நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. நினைவிடம் மட்டுமல்ல; கலைஞரை உருவாக்கிய, நம் […]

Loading

செய்திகள்

இளநிலை நீட் நுழைவுத்தேர்வுக்கு வெளிநாடுகளில் 14 தேர்வு மையங்கள்

சென்னை, பிப்.22– இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள 554 தேர்வு மையங்களில் மே 5-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவுக்கு வெளியே தேர்வெழுதும் […]

Loading

செய்திகள்

புதுச்சேரியில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

புதுச்சேரி, பிப். 22– புதுச்சேரி சட்டசபையில் இன்று ஐந்து மாத செலவுக்கான ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024–25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய […]

Loading

செய்திகள்

பெண்கள் நலனை மேம்படுத்த தமிழ்நாட்டில் மகளிர் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் சென்னை, பிப்.22- பெண்கள் நலனை மேம்படுத்துவதற்காக, மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் 2024-ம் ஆண்டுக்கான மாநில மகளிர் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் […]

Loading