செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாநிலங்களுக்கான வரிப்பகிர்வுத் தொகை ரூ.72,961 கோடி விடுவிப்பு

தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி புதுடெல்லி, நவ.8- மாநிலங்களுக்கான மாதாந்திர வரிப்பகிர்வு 10-ந் தேதியை கணக்கிட்டு விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பண்டிகை காலத்தை முன்னிட்டு 3 நாட்கள் முன்னதாக வரிப்பகிர்வுத் தொகையை விடுவித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான வரிப்பகிர்வுத்தொகை ரூ.72,961.21 கோடியை, 10ந் தேதிக்கு பதிலாக 7ந் தேதி வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தமிழ்நாட்டுக்கான பகிர்வுத்தொகை ரூ.2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சம் ஆகும். […]

Loading

செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னை, நவ.8– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இன்று 3வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.76.50க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,500-க்கும் விற்பனையாகிறது.

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

1 லட்சம் பேர் முன்பதிவு சென்னை, நவ.8– தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளியை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது. […]

Loading

செய்திகள்

சென்னையில் 2 பெண்களுக்கு கொரோனா

சென்னை, நவ.8- தமிழ்நாட்டில் நேற்று 331 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய காங்கிரஸ் அரசு

சத்தீஸ்கரில் மோடி குற்றச்சாட்டு சூரஜ்பூர், நவ. 8– சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் சூரஜ்பூர் மாவட்டத்தில், பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக, நேற்று நடந்த […]

Loading

செய்திகள்

தீபாவளி தொடர் விடுமுறை: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை, நவ. 8– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, நாளை 9–ந் தேதி, 10–ந் தேதி மற்றும் 11–ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு […]

Loading

செய்திகள்

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

பெங்களூரு, நவ. 8– கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்ட்டூர் அருகே உள்ள நோன்வினகரே கிராமம் குங்கரள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரப்பா (61), கிருஷ்ணப்பா (60), தனஞ்சயா (55), பாபு மற்றும் ஜெயண்ணா ஆகிய 5 பேரும் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டனர். விருந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு 5 பேரும் மீண்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். […]

Loading

செய்திகள்

காசா நகரின் சுரங்கங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்

டெல் அவிவ், நவ. 8– காசா நகரின் மைய பகுதிக்கு சென்ற இஸ்ரேல் ராணுவம் சுரங்கங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ்களுக்கு இடையேயான போர் 33 வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்களின் பரந்த சுரங்கப்பாதைகளைக் கண்டுபிடித்து தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. இஸ்ரேலின் தரைப்படைகள் ஹமாஸ்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை […]

Loading

செய்திகள்

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்று செல்லும்

சென்னை, நவ.8– சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12–ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு, சென்னையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு […]

Loading

செய்திகள்

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்

பாட்னா, நவ.8– பீகார் சட்டசபையில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட முதல்வர் நிதீஷ் குமார் மன்னிப்பு கோரினார். பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் 2ம் கட்ட அறிக்கையை அம்மாநில சட்டசபையில் நேற்று முதலமைச்சர் நிதீஷ் குமார் தாக்கல் செய்து பேசினார். […]

Loading