செய்திகள் வாழ்வியல்

வளரும் நாடுகளை விட செயற்கை நுண்ணறிவால் வளர்ந்த நாடுகளுக்கு பாதிப்பு


அறிவியல் அறிவோம்


செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது.

வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும்.

ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளை செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும் ; ஊதியத்தை பாதிக்கும்; மேலும் சில வேலைகளை இல்லாமலே செய்துவிடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு 26% வேலைகளை பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஒரு மனிதனைப் போலவே செயல்படவும் எதிர்வினை ஆற்றவும் வைக்கிறது. மனிதனைப் போலவே ஒரு விஷயத்தை கணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது.

கணினியைக் கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algorithms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *