செய்திகள்

‘மிக்ஜாம்’ புயலால் ரெயில்கள் ரத்து : கட்டணத்தை திரும்ப பெற சிறப்பு கவுண்டர்கள்

சென்னை, டிச. 11–

மிக்ஜாம் புயலால் ரத்து செய்யப்பட்ட ரெயில் கட்டணத்தை திரும்ப பெற சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன. 40 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக ரெயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆவடி ,கொருக்குப்பேட்டை, சென்னை கடற்கரை ,எழும்பூர், சென்னை சென்ட்ரல் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.குறிப்பாக பேசின் பாலத்தில் உள்ள 14-வது எண் பாலத்தின் உயரம் கனமழை பாதிக்காத வகையில் 2 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *