சிறுகதை

தவிப்பு தணிந்தது – மு.வெ.சம்பத்

பள்ளிப் படிப்பு முடித்த தாரா கல்லூரிப் படிப்பில் சேர்ந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்தவர் முதலில் அந்த அறையை நன்கு தனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் சுத்தம் செய்தார். அப்போது அங்கு வந்த வார்டன் இந்த அறையில் இன்னும் ஒரு மாணவி வந்து தங்குவார் என்றதும் தாரா அறையின் ஒரு பகுதியில் ஐக்கியமானார். சற்று நேரத்தில் அங்கு வந்த கோகிலா மிகவும் படாடோமாக காணப்பட்டார். நுழைந்ததும் அவர் பின்னால் வந்த வார்டன் தாராவை நோக்கி இவர் தான் உங்கள் அறையில் உங்களுடன் தங்குபவர் என்றும் கோகிலாவிடம் தாரா தான் அறையைச் சுத்தம் செய்தார் என்றதும் கோகிலா சிறு புன்னகையைச் சிந்தி விட்டு இது அடிக்கடி நடக்குமா என்று கூறி விட்டு கூட வந்தவர்களிடம் பொருட்களை அடுக்கச் சொன்னார். அவர்கள் கொணர்ந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கை பேசியில் ஆழ்ந்தார்.

தாராவின் மனதிற்குள் இந்த அறை நமக்கு சிறிது நாள் தான் என்றார். சிறிது நேரத்தில் வந்த ஆட்களை செமையாக வேலை வாங்கி ஆட்டி வைத்தார்.

அடுத்த பத்து நிமிடங்களில் கோகிலா வார்டனிடம் தான் ஒரு வேலையாக செல்ல வேண்டியுள்ளது என்று கூறி விட்டு தான் இரவு 7 மணிக்குள் வந்து விடுவேன். பயம் வேண்டாம். என்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறி நகர்ந்தார்.

அவர் சென்ற பின் தாராவிடம் வார்டன் புரிந்து நடந்து கொள்ளுங்கள் என்றார். பெரிய இடம் பட்டம் தன் பெயரின் பின்னால் வரவே சேர்ந்திருக்கிறார் என்றார்.

தாராவிற்கு தனது செயலில் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தாமல் நல்லதென நினைப்பவர். தானும் அனாவசியமாக யாருடைய செயல்களிலும் தலையிடுவதைத் தவிர்ப்பவர்.

தனது நோக்கம் படித்து முடித்து விட்டு ஒரு வேலையில் அமர்ந்து தான் தொடங்கிய பணியை சீராக செய்ய வேண்டுமென்பதே.

தனது செயல் சில சமயங்களில் ஆபத்தாக முடியும் என்று அறிந்தும் அந்த சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதாவது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களை மீட்டு புது வாழ்க்கையை அவர்கள் வாழச் செய்வதில் தாரா மிகவும் மும்மரமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தனது தந்தை காவல் துறை அதிகாரியாக இருப்பது ஒருவிதத்தில் நன்மை என்றாலும் தாரா தேவையில்லாமல் தந்தையின் உதவியை நாட மாட்டார். சில தொண்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து இவர் செல்வதால் பெரிய பிரச்சனைகளை இதுவரை சந்திக்கவில்லை தாரா. தாராவின் தந்தை தாரவிடம் பொது நல சேவை என்று படிப்பை கோட்டை விட்டு விடாதே என்று கூறுவார்.

அன்று வந்த கோகிலா தாராவிடம் நான் தினமும் கதைக் களஞ்சியம் என்ற அமைப்பு நடத்தி வரும் நூலகத்திற்குச் சென்று புதிதாக வரும் நல்ல கருத்துக்களையுடைய கதையைத் தேர்ந்தெடுத்து எனது தந்தையிடம் தந்து ஒரு குறும்படம் எடுக்கச் சொல்லி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் என்றார்.

சமுதாய சீர்கேட்டை தோலுரிப்பதே எனது வேலை என்றார். நான் அதற்காக எனது படிப்பை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்து படிப்பேன் என்றார்.

தாரா சிறு புன்னகையுடன் தங்கள் தொண்டிற்கு எனது ஆதமார்த்தமான வணக்கங்கள். தங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் என்னால் முடிந்த அளவு செய்கிறேன் என்றார்.

கோகிலா நன்றி எனக்கூறி விட்டு அறையை சுத்தம் செய்யும் வேலையை பகிர்ந்து செய்யலாம் என்றதும் தாரா மிகவும் மகிழ்ச்சியாகி அப்படியே ஆகட்டும் என்றார்.

இரண்டு நாட்கள் கழித்து வார்டன் தாராவைப் பார்த்து என்ன செய்தாய் கோகிலா எளிய முறையில் நடந்து கொள்கிறார் என்றார்.

அவர்கள் எடுத்த முடிவில் நமக்கு ஆதாயம் இருந்தால் நன்மையே என்றார் தாரா. இரவில் இரண்டு பேரும் அதிக நேரம் படிப்பீர்களோ என்றார் வார்டன். கோகிலா தான் நிறைய குறிப்புகள் எழுதிக் கொண்டு இருப்பார் என்றார். நல்ல முறையில் சென்றால் நல்லது என்றார் வார்டன்.

அன்று வெளியில் சென்று வந்த கோகிலா தாராவிடம் இன்று நான் ஒரு புத்தகம் படித்ததாகவும் அதில் என் மனம் மிகவும் லயித்து விட்டது என்றார். புத்தகத்தை கிழே வைக்கவே மனமின்றி, அந்த பதிப்பாளரிடம் நேரில் சென்று ஒரு புத்தகம் வாங்கி வந்துள்ளேன் என்றார்.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் பெயர் பா.தொ.பா என்று மற்றும் உள்ளது என்றார்.

பதிப்பகத்தாரிடம் மேலும் விவரம் கேட்க ஆசிரியர் பெயரைக் கூறக் கூடாதென உறுதிப் பத்திரம் வாங்கியுள்ளார் என்றார். இதுவரை ஒரு இலட்சம் காப்பிகள் விற்று விட்டன என்றார். ஆசிரியருக்கு தர வேண்டிய தொகையை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தரச் சொல்லி விட்டார் என்று கூறினார். தாராவிடம் எனக்கு ஆசிரியர் பெயர் தெரிய வேண்டுமென தவிப்பில் உள்ளேன் என்றார். தாரா இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களா என்று கூறி நானும் முயற்சிக்கிறேன் என்றார்.

வார விடுமுறையில் வீடு சென்ற கோகிலா தந்தையிடம் இந்தப் புத்தகத்தைத் தந்து ஒரு குறும்படம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

தந்தையும் படித்து விட்டு நன்றாகவே உள்ளது. ஆனால் ஆசிரியர் பெயர் வேண்டுமே, அவர் அனுமதி வேண்டுமே என்று கூற, கோகிலா முகம் சிறுத்தது. எப்படி கண்டு பிடிப்பது என்று தந்தையிடம் கேட்க அவர் எனது நண்பர் மூலம் இது சாத்தியம் என்றார்.

மறு நாள் கோகிலாவை அழைத்துக் கொண்டு அவர் தந்தை அவர் நண்பரான காவல் துறை அதிகாரி வீட்டிற்குச் சென்றார்.

அவரை மகிழ்வுடன் வரவேற்ற அதிகாரி சிறிது நேரம் பேசி விட்டு அவர்களுக்கு சிற்றுண்டி தந்து விட்டு என்ன சமாச்சாரம் என்றார். கோகிலாவின் தந்தை அந்த புத்கத்தை நீட்டி இந்த புத்தகம் எழுதியவர் பெயர் வேண்டுமென்றார். இதுவொன்றும் பெரிய வேலையில்லை என்று அவர் கூறியதும் கொஞ்சம் தவிப்பு அடங்கியது கோகிலாவிற்கு. நாங்கள் ஒரு குறும்படம் இந்தக் கதையைக் கொண்டு பண்ணலாம் என்று உள்ளோம் என்றார் கோகிலாவின் தந்தை.

தாராளமாக எடுங்கள் என்ற அதிகாரி, அப்போது வந்த மனைவியிடம் தனது மகளை அழைக்குமாறு கூற, சற்று நேரத்தில் வந்த அவளது மகளை நண்பரிடம் இவர் தான் ஆசிரியர் என்றதும் கோகிலா தவிப்பு தணிந்து மகிழ்வின் உச்சத்திற்கே சென்றார். அது வேறு யாருமல்ல, தாரா தான் என்று அறிந்ததும் தாராவின் அப்பாவிடம் உங்கள் மகள் தான் உண்மையான சமூக சேவகர் என்று கூறி தாராவை அணைத்துக் கொண்டார். அப்போது கோகிலா தாராவிடம் பா.தொ.பா என்றால் என்ன என்று வின, தாரா பாலியல் தொல்லையருக்கு பாதுகாவலர் என்றதும் கோகிலா தனது தந்தையிடம் தாராவை முன்னிறுத்தி நாமும் ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிப்போம் என்றதும் தாரா முகத்தில் மகிழ்வலைகள் வானவில் போன்று தோன்றி மறைந்தது எனலாம்.

கோகிலா தந்தை நாம் மட்டும் நண்பர்கள் அல்ல, நமது பெண்களும் நண்பிகள் தான் என்றதும் நால்வர் சிரிப்பில் அறையே அதிர்ந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *