சிறுகதை

தாத்தாவின் பாசம் – எம்.பாலகிருஷ்ணன்

ஏங்க பக்கத்து வீட்டுக் குழந்தையை எந்த நேரமும் கொஞ்சிறீங்களே அந்தக் குழந்தை உங்கள தாத்தா தாத்தான்னு சொல்லுது. நீங்களும் சொந்தப் பேரனை கொஞ்சுறமாதிரி கொஞ்சுறீங்க.

ஏண்டி குழந்தை தாத்தான்னு பாசத்தோடுவருது. அதை போயிகொஞ்ச வேணாமுன்னு சொல்லுற

உங்கள தாத்தான்னு சொல்லுறதுக்கு நம்ம சொந்த பேரனே இருக்கானில்ல. அப்புறம் ஏன் அடுத்தவீட்டுக் குழந்தையை கொஞ்சுறீங்க.

நம்ம பேரன் தான் ஊர்ல இருக்கானில்ல; அவன் வர்றவரைக்கும் இவனை கொஞ்சுனா என்னதப்பு.

ஏங்க நீங்க யோசிச்சித் தான் பேசுறீங்களா? நம்ம பேரனை கொஞ்சனுமுன்னா வெளிஊர்ல இருக்கிற நம்மமகள் வீட்டுக்கு போயி குழந்தையை கொஞ்சுங்க. அதைவிட்டுட்டு கண்டவங்க குழந்தையக் கொஞ்சாதீங்க.

ஆமாடி பேரனை கொஞ்சுறதுக்கு வெளிஊர்ல இருக்குற மகள் வீட்டுக்கு அடிக்கடி போக முடியுமா? பஸ் என்ன பிரியாவா விட்டுருக்காங்க? யார் குழந்தையா இருந்தா என்னடி? அன்பா வர்ற குழந்தையை வெறுக்க முடியுமா? அந்தக் குழந்தை அவங்க தாத்தாவா நினைச்சி ஓடி வருது. அதை இங்க வராதே .அப்படின்னு சொல்ல முடியுமா?

என்று கணவன் பரமனுக்கும் மனைவி பார்வதிக்கும் அவ்வப்போது நடக்கும் வாக்குவாதம் தாம் இன்றும் நடக்கிறது

பரமசிவம் குழந்தைமேல் பொதுவாக பாச உணர்வுகளை வெளிப்படுத்துவார். அது யார் குழந்தையாக இருந்தாலும் விடமாட்டார் இப்பேர்ப்பட்ட இவர் தம் சொந்தபேரன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருப்பார்.

அந்த பாசத்தின் அடையாள மாகத் தான் எந்தகுழந்தையாக எவர் குழந்தையாக இருந்தாலும் சரி என்று உடனே குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்து விடுவார்

மகளை வெளியூரில் உள்ளமாப்பிள்ளைக்குக்கல்யாணம் செய்துவைத்துள்ளார் மாதத்திற்கு ஒரு தடவையோஇரண்டு மாதத்திற்குஒருதடவையோமனைவி பார்வதியுடன் சென்று பார்த்துவருவார்சிலநேரம் இவர் மட்டும் பேரனைப்பார்த்து வருவார் அந்த அளவிற்கு பேரன் மேல்அளவுக்கு அதிகமானபாசம் வைத்திருப்பார்

அண்மைக் காலமாகஇவருக்கு உள்ளூரில்அதிக வேலையானதால் வெளியூரிலுள்ளபேரனை பார்க்க முடியாமல் போனதால்பேரனைப் பற்றியநினைவிலேயேஇருந்துள்ளார் அதனாலத் தான் பக்கத்துவீட்டுக் குழந்தையைதன் பேரனாக தூக்கியுள்ளார்

அன்றிலிருந்துபக்கத்து வீட்டுக் குழந்தை இவரைதாத்தா தாத்தா என்றுஅந்த இரண்டு வயது ஆண் குழந்தை இவரின் வீட்டுக்கு நாள் தவறாமல் வந்து செல்லும்

இவரும் அந்தக் குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்து விடுவார்

மனைவி பார்வதிக்கு இவரின் செயல்பாடு எரிச்சலடைய செய்துவிட்டது அதனால் தான்அவருடன் இன்றுவாக்கு வாதத்தில்ஈடுபட்டிருக்கிறாள்

மறு நாள் காலை வழக்கம் போல் வரும்பக்கத்து வீட்டுக்குழந்தை பரமசிவன் வீட்டுக்கு வரவில்லை. இவர் இரவு வேளை வாட்ச்மேன்வேலைக்கு போய்விட்டு காலையில் வருவது வழக்கம்.

இன்று அவர் வந்து வெகுநேரம் ஆனதால் பக்கத்து வீட்டுக் குழந்தை இன்னும் அவரைப் பார்க்க வரவில்லை. அவர் வாங்கி வந்தமிட்டாய் பாக்கெட் அவர் கையிலிருந்ததது.

மனைவி பார்வதிக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்தார். அவர் அங்குமிங்கும் வீட்டில் நடந்து கொண்டிருந்தை பார்த்தமனைவி பார்வதி

‘‘ ஏங்க யாரை பார்த்திட்டு இருக்கீங்க’’ என்றும் கேட்க அதற்கு பரமசிவம்

பக்கத்து வீட்டுப் பையனைத் தான் பார்த்திட்டு இருக்கேன் இன்னும் வரக் காணோமே என்று பதில்சொன்னார்

அதற்கு மனைவி அந்தக் குழந்தை அவங்க அம்மாவோட வெளியூருக்கு போயிருக்கு வர்றதுக்கு ஒருவாரம் ஆகுமாம்

இதைக் கேட்டதும் பெரும் அதிர்ச்சிக் குள்ளானார் பரம சிவம்.

என்ன பக்கத்துவீட்டு குழந்தை வெளியூருக்கு போயிடிச்சா என்று பரபரப்புடன் கேட்டார்

ஆமாங்க அவங்க சொந்தக்காரங்களுக்கு கல்யாண விசேசமாம் . அதனால் நேத்து நைட்ல போயிட்டாங்க என்றாள்.

இருந்தாலும் அவர்மனசு கேட்கவில்லை உடனே குழந்தையின் பாட்டியிடம் விசாரிக்க பக்கத்து வீட்டுக்குப் போனார்.

அங்கே போய்விசாரிக்க அவர்களும் ஆமாங்க மகளோட வீட்டுக்காரரோட சொந்தக்கார பையனுக்கு கல்யாணம். அதனால நேத்தே ஊருக்கு போயிட்டாங்க என்று குழந்தையின் பாட்டி சொல்லவும் பரமசிவம் மிகவும் கவலையடைந்தார்

நான் எப்படி பக்கத்து வீட்டுக் குழந்தையை பாக்காமல் இருக்க போறோனோ என்று புலம்பத் தொடங்கினார்

குழந்தைக்காக வாங்கி வந்த மிட்டாயெல்லாம் வீணா போயிடிச்சே என்று எண்ணியபடி அவர்வீட்டினுள் நுழைந்தார்.

ஒரு வாரம் உருண்டோடியது எப்படியோ பரமசிவம் இந்த ஒரு வாரத்தை போக்கிவிட்டார்

அவரின் நினைவெல்லாம் அந்தப் பக்கத்துவீட்டுக் குழந்தையைப் பற்றியே வட்ட மடித்தது

அந்த இரண்டு வயது குழந்தை தாத்தா என்று பாசத்தோடு அவர் வீட்டுக்கு வந்தக் குழந்தையாச்சே . அவ்வளவு எளிதில் குழந்தையை மறக்கமுடியாதே. ஒருவர் மீதோ ஒரு பொருளின் மீதோ அன்பு வைத்து விட்டால் அதை அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு விலக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது? அன்புக் கோட்டையில் அடைக்கப்பட்ட சிறைக் கைதியாகவும் பாசக் கூண்டிலே மாட்டிய கிளி போலவும் அல்லவா ஆகிவிட்டார் பரமசிவம்.

சொந்தப் பேரனையும் கொஞ்ச முடியாமல் பக்கத்து வீட்டுப் பேரனையும் கொஞ்ச முடியாமல் கண்களைக் கட்டி காட்டுக்குள்ளே விட்டதை போல் தவித்தார்.

அவர் இரவு வேலை. செக்யூரிட்டி பணி பார்ப்பதால் பகலில் சிறிது ஓய்வெடுத்து குழந்தையின் பாசத்துக்கு ஏங்குப வராச்சே

ஊருக்குப் போன பக்கத்து வீட்டுக் குழந்தை ஒரு வாரமாகியும் இன்னும் வரவில்லை ஏன் வரவில்லை? தவித்தார் பரமசிவம். இதை மனைவியிடமே கேட்கலானார்

ஏண்டி பார்வதி பக்கத்து வீட்டுக் குழந்தை ஊருக்குபோயிருக்குன்னு சொன்னே .ஒரு வாரமாச்சே. இன்னும் குழந்தையக் காணோம் .அவங்க வந்துட்டாங்களா இல்லையா? எனக் கேட்டார்.

ஏங்க என்னங்க ஆச்சி உங்களுக்கு. எப்ப பார்த்தாலும் பக்கத்து வீட்டுக் குழந்தை நினைப்பிலே இருக்கீங்க.

இன்னும் ஒரு வாரத்துக்கு வரமாட்டாங்களாம். ஊர்ல கொஞ்சம் வேலையாக இருக்காங்களாம் என்று மனைவி பார்வதிசொல்லவும்

பரம சிவத்திற்கு தலையில் பாறாங் கல்லை தூக்கி போட்டுதுபோலானார்.

உடனே மனைவியிடம் கெஞ்சி கூத்தாடினார்.

சரி பார்வதி நம்ம பேரனையாவது பாத்துட்டு வந்துடுவோம். என்னால் குழந்தையை பாக்காம நிம்மதியாக இருக்கமுடியல. வா ஊருக்குப் போவோம் என்று மனைவியிடம் சண்டைபோட்டு வலுக் கட்டாயமாக பார்வதியை ஊருக்கு இழுத்துக்கொண்டு சென்றார் பரமசிவம்.

மனைவியுடன் பஸ்ஸ்டாண்டுக்குச்சென்று பஸ் ஏறிஉட்கார்ந்தார். பரமசிவத்திற்கு பேரனை பார்க்கும் சந்தோசம் நினைவில் ஊஞ்சலாடியது.

சொந்தப் பேரனை பலமாதங்கள் கழித்துபார்க்கும் மகிழ்ச்சியில் பஸ் ஏறுவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட தின்பண்டங்கள் விளையாட்டு சாமான்கள் என்று வாங்கி வைத்துக் கொண்டார்

பார்வதி அவரைப் பார்த்துக் கோபப்பட்டாலும் மனதுக்குள் அவரின் குழந்தைப் பாசத்தை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண்டாள்.

ஐந்து மணிநேரம் கழிந்தது பரசிவனும் மனைவி பார்வதியும் பேரன் இருக்கும் ஊர் வந்து சேர்ந்தனர்.

பஸ்ஸை விட்டு இறங்கி பேரன் இருக்கும் இடத்துக்கு ஆட்டோ ஏறி இறங்கிவீட்டுக்கு நடந்து சென்றனர்.

வீட்டை அடைந்ததும்அவர்கள் அதிர்ச்சியில் நின்றனர்.வீடு பூட்டப்பட்டிருந்தது

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை பக்கத்து வீட்டில் விசாரித்தனர்.

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒர் அம்மா உங்கள் மகள் உங்கள பாக்குறதுக்கு உங்க ஊருக்கு புருசனோட காலையிலேயே போனாங்களே. உங்களுக்குத் தெரியாதா?என்றுக் கேட்க

எங்களுக்குத் தெரியாதே என்றுக் கூறினார்

சரியா போச்சு உங்கமகள் உங்களுக்கு ஊருக்குப் போறதுக்கு முன்னாடி போன்பண்ணி பாத்தாங்க போன் சுவிட்ச் ஆப்பாகி இருந்ததாம். உங்க பேரன் நைட்ல தூங்கவே யில்லை. தாத்தாவப் பாக்கணும் முன்னு ஒரே அழுகை. அதனால உடனே ஊருக்கு கூட்டிட்டு போங்கன்னு வேறகத்தினான்.

உங்க மகளும் வீட்டுக்காரும் காலையிலே உங்கள பாக்க ஊருக்கு கிளம்பிட்டாங்களே என்று சொன்னார்கள்.

பரமசிவம் அப்போது தான் போனை பார்த்தார் போன் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது.

பேரனை பார்க்கும் அவரத்தில் போனுக்கு சார்ஜ் ஏற்ற மறந்து விட்டார்

பேரனை பார்ப்பதற்கு வெகு தூரத்திலிருந்து வந்து இப்படி ஆகிவிட்டதே என்று பரமசிவம் மிகவும் கவலையாகி உடனை மனைவியை கூட்டிக் கொண்டு மறுபடியும்அவர் ஊருக்கே புறப்பட்டார்.

உற்சாகமாக வந்தவர் சோர்வாக பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார். மனைவி பார்வதி அவரைத் திட்டிக்கொண்டு வந்தாள். அவரும் அதைப் பெரிதாக எண்ணாமல் வசைபாடுவதை வாங்கிக் கொண்டார்.

பரமசிவனும் பார்வதியும் அவர்கள் ஊர்வந்து சேர்ந்தனர்.

வீடு வந்து சேர்ந்ததும் இரவாகி விட்டது மகளும் குழந்தையும் மருமகனும் பக்கத்து வீட்டில் இருந்தனர்

அவர்களைப் பார்த்ததும் பரசிவம் தன் தவற்றை உணர்ந்து மகளிடம் மன்னிப்புக் கேட்கும் நேரத்தில்

தாத்தா என்றுக் கத்திய வாறே குழந்தை ஓடி வந்து அவரைக்கட்டி பிடித்தது.

பரசிவம் ஊரிலிருந்து வந்த நமது பேரன் தானே என நினைத்து அவனை தூக்கப்போக கடைசியில் அவன் பக்கத்து வீட்டுக் குழந்தை

காலையில் வழக்கம் போல் அவரை தாத்தா என்று அன்புத் தொல்லை கொடுத்த குழந்தையே

இவன் இன்னும் ஒருவாரம் கழித்து வருவான் என்று பார்வதி சொன்னதுபொய் என்பதும் அப்போது தான் பரமசிவத்திற்கு புரிய ஆரம்பித்தது

ஏன் இப்படி பொய் சொன்னாய் என்று பரமசிவம் கேட்டதுக்கு நீங்க இப்படிச் சொன்னா தானே ஊருல இருக்கிற பேரனைபாக்கக் கூட்டிட்டு போவீங்க என்றாள் பார்வதி

அப்போது சொந்தபேரன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

சொந்தபேரனுக்கு வாங்கிய தின்பண்டங்களில் ஒருபகுதியை எடுத்து பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு கொடுத்தார் பரமசிவம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *