செய்திகள்

டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல்

புதுடெல்லி, நவ. 24–

டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக உறவை துண்டித்துள்ளன. மேலும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தையும் மூடியுள்ளன. ஆனால் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளையும் இந்தியா வழங்கி வந்தது.

இந்நிலையில் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. தூதரக செயல்பாடுகளுக்கு இந்தியா உதவவில்லை என்பதால் டெல்லியில் உள்ள அலுவலகத்தை மூடுவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் வாழும் ஆப்கானிஸ்தான் நாட்டினர் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *