செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஒய்.எஸ். சர்மிளா காங்கிரசில் இணைகிறார்

அமராவதி, ஜன.2–

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் உள்ளார். இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள், இணைய இருக்கிறார்.

வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *