செய்திகள்

ஐபிஎல் போட்டி காண வருவோருக்கு இலவச பஸ் டிக்கெட் வழங்கவில்லை: சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை, மார்ச் 23–

ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதாகத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

17 வது ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. சென்னையில் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேற்று மோதி, சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், தங்களது இணைய டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்தாக நேற்று செய்திகள் வெளிவந்தன.

சிஎஸ்கே அணி ஒப்பந்தம்

மேலும், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணிநேரத்திற்கும் பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஏ.சி பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், ‘அந்தச் செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதே. சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசு செலவில் இலவசப் பேருந்து சேவை வழங்கவில்லை. மாறாக, போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் பயணச்செலவை போக்குவரத்துத் துறைக்கு செலுத்தி விட்டனர்.

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களுக்கு மட்டும் இலவச மெட்ரோ பயண சேவை அறிவித்திருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *