சிறுகதை

ஏங்க… என்னங்க…!- ராஜா செல்லமுத்து

ஏங்க சாப்பாடு எடுத்து வைங்க. நீங்க சாப்டீங்களா ? பிள்ளைங்க சாப்பிட்டார்களா? நான் வரணும் அப்படிங்கறதுக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம். நீங்க சாப்பிடுங்க. ஏன்னா நான் நைட்டு எத்தனை மணிக்கு வருவேன்னு எனக்கே தெரியாது.நான் சாப்பிட்ட பிறகு தான் நீங்க சாப்பிடணும் அப்படிங்கிற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உங்களுக்கு எப்ப பசிக்குதோ அப்ப நீங்க சாப்பிடுங்க என்று தன் மனைவி மணியம்மாளிடம் கரிசனையோடு சொன்னார் ராமசாமி.

நீங்க வந்த பிறகு தான் சாப்பிடணும்னு எனக்கு தோணுது. அதனாலதான் சாப்பிடல. நீங்க வாங்க சாப்பிடலாம்

என்று கணவனை அன்போடு டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றாள் மணியம்மாள்.

சரி நீங்க உட்காருங்க. தட்ட இப்படி வையுங்க

என்று முதலில் மணியம்மாளுக்குத் தட்டை வைத்துப் பரிமாறினார் ராமசாமி.

இல்ல வேண்டாம்; நீங்க சாப்பிடுங்க; நீங்க உட்காருங்க ; நான் போடுறேன் என்று மணியம்மாள் எவ்வளவு சொல்லியும் கேட்காத ராமசாமி மணியம்மாளை அமர வைத்து பரிமாறினார்.

ஒருவாறான பயமும் வெக்கமும் மணியம்மாவை தொற்றிக் கொள்ள கொஞ்சம் நடுங்கிக் கொண்டே சாப்பிட்டாாள்.

பயப்படாதீங்க. சாப்பிடுங்க நான் உங்க வீட்டுக்காரர் தானே? அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல என்று மணியம்மாளுக்குப் பரிமாறினார் ராமசாமி.

மணியம்மாள் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைக்க

எ ஐயோ விடுங்க. என்ன இவ்வளவு பெரிய வேலை செய்றீங்க? எனக்கு என்னமோ மாதிரி இருக்கு என்று மணியம்மாள் எகிறினாள்.

நீங்க ஒன்னும் வருத்தப்பட வேண்டாம் .நானே பாத்துக்கிறேன்; நீங்க உட்காருங்க என்று மனைவி சாப்பிட்ட தட்டையும் கழுவினார் ராமசாமி.

இது என்ன தலைகீழாக இருக்கு; எல்லா வீட்டிலும் பொம்பளைங்க தான் வேலை செய்வாங்க. ஆம்பள உக்காந்து இருப்பாங்க. நீங்க என்னடான்னா என்னைய உக்கார வச்சுட்டு நீங்க சாப்பாடு போடுறீங்க? தட்டு கழுவுறீங்க; நல்லா இருக்கா?என்று மணியம்மாள் முகம் சுளித்தாள்.

யார் சொன்னது ? காலங்காலமா பொம்பளைங்க தான் வேலை செய்யணுமா? ஏன் ஆம்பளைங்க செய்யக்கூடாதா? நீங்க உட்காருங்க என்று சொன்ன ராமசாமி அவரும் தானே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டு வீட்டைத் துடைத்துச் சுத்தம் செய்தார்.

மணியம்மாளுக்கு ராமசாமியின் செய்கை கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லாமல் இருந்தது.

யாராவது பாத்தா ஆம்பளையக் கொடுமை பண்றேன்னு என்னையத் திட்டப் போறாங்க. அமைதியா உட்காருங்க என்றாள் மணியம்மாள்.

அதைவிட நீங்க நான்கன்னு பேசுறது? எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. எந்த வீட்டிலையாவது கணவர் பொண்டாட்டியை நீங்க , வாங்க பாேங்கன்னு பேசுவாங்களா? இது என்ன வித்தியாசமான வழக்கமா இருக்கு .எனக்கு நீங்க செய்றது பயமா இருக்கு

என்று வருத்தப்பட்டாள் மணியம்மாள்

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. காலங் காலமா பொண்டாட்டிகள போடி வாடி, அவளே இவளே, நாயி, பேயி இப்படின்னு ஏளனமாகவும் இழிவாகவும் பேசி அவங்கள கேவலப்படுத்தியது போதும். இந்த துவக்கம் என்கிட்ட இருந்து துவங்கட்டும். இனிமே உங்களை நீங்க நாங்கன்னு தான் பேசுவேன். அதை நீங்க பொறுத்துக்கிட்டு தான் ஆகணும் என்று கொஞ்ச நாட்களாகவே சொல்லிக் கொண்டு வந்தார் ராமசாமி .

தன் கணவனின் பேச்சை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத மணியம்மாள் ரொம்பவே கூச்சப்பட்டாள்.

சொல்லிச் சொல்லி பார்த்தும் ராமசாமி கேட்பதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவளே விட்டுவிட்டாள்.

கூட்டம் கும்பலில் மணியம்மாளை ராமசாமி வாங்க போங்க என்று பேசுவதைப் பார்த்து அங்கிருக்கும் மனிதர்கள் ராமசாமியை ஏளனமாகவும் கேவலமாகவும் பேசினார்கள் .

அதெல்லாம் ஒரு பொருட்டாக அவர் எடுத்துக் கொள்ளவே இல்லை.

மாறாக சக மனுசிக்கு நம்முடன் பயணிக்கும் ஒரு ஜீவனுக்கு நாம் தரும் அடிப்படை மரியாதை என்று நினைத்துக் கொண்டார் ராமசாமி

இப்படியாக தொடர்ந்து கொண்டிருந்தது அவர்களின் வாழ்க்கை .

ஒரு நாள் அவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

நீங்கதான் ராமசாமியா?

என்று எதிர் திசையில் ஒரு அமைச்சர் கேள்வியாய் கேட்டார்.

ஆமா நான் தான் என்று சொன்னார் ராமசாமி .

இந்த உலகத்துல யாருமே செய்ய முடியாத ஒரு வேலையை இந்த மனுஷங்களுக்கு முதுகில சாட்டை அடிக்கிறது மாதிரி ஒரு விஷயத்தை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்.

நீங்க நடிக்கிறீங்களா ? இல்ல உண்மையிலே பெண்களுக்கு மரியாதை கொடுக்குறீங்களா? அப்படிங்கறத தொடர்ந்து கண்காணித்து வந்தோம் . நீங்க வீட்டிலேயும் வெளியிலயும் உங்க மனைவிக்கு தர்ர மரியாதை அவங்கள ஏளனமாகவும் அசிங்கமாகவும் கீழ்த்தரமாகவும் பேசாம, ஏங்க வாங்க போங்க என்று பேசுவதையும் நாங்க கவனிச்சோம் .உண்மையிலேயே உங்களில் இருந்து இந்த பூமி புதுசா பிறக்கட்டும்.

கணவன்கள் இனிமே தான் கட்டின மனைவிகளை நீங்க , நாங்க என்று மரியாதையாக பேசட்டும். அப்படிங்கற தொடக்கத்தை நீங்க தொடங்கி வச்சிருக்கீங்க . அதனால உங்களுக்கு “

மரியாதைக்குரிய மனிதர்” அப்படிங்கிற பட்டத்தை உங்களுக்கு கொடுக்கிறோம்.

என்று அமைச்சர் பேசியதோடு நிற்காமல் அடுத்த நாளே அத்தனை செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த செய்தி பெரிதாக போடச்செய்தார் .அது எங்கும் பேசப்பட்டது.

அதிலிருந்து இதைப் பார்த்த மனிதர்கள் தங்கள் மனைவிகளையும்

ஏங்க ,வாங்க ,போங்க என்று பேச ஆரம்பித்தார்கள்.

சிலருக்கு இது சிரிப்பாக இருந்தது. சிலருக்கு சிறப்பாக இருந்தது.

ராமசாமி எந்தத் தூண்டுகோலும் இல்லாமல் நமக்கு யாரும் விருது தருவார்கள் என்று அவர் தன் மனைவியை நீங்க நாங்க வாங்க போங்க என்று பேசவில்லை.

மாறாக சக மனிதனுக்குத் தரும் மரியாதை என்று கூப்பிட்டு வந்தார்.

மற்றவர்கள் எல்லாம் பரிசு கிடைக்கும் என்ற தாெனியில் தங்கள் மனைவியை அழைக்கத் தொடங்கினார்கள்.

உதட்டில் இருக்கும் மரியாதை உள்ளத்திற்கு போகும்போது அவர்களுக்கும் பரிசுகளும் அங்கீகாரமும் வந்து சேரும்

என்று நினைத்தார் ராமசாமி.

இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் மனைவிகளை

ஏங்க, என்னங்க, நீங்க , வாங்க, போங்க என்றே அழைக்க ஆரம்பித்திருந்தார்கள் கணவன்மார்கள்.

அவர்களுக்கும் விருதுகள் வரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *