வாழ்வியல்

அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி நோய்களைத் தடுக்கலாம்


நல்வாழ்வுச் சிந்தனை


பழ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தினமும் ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான். பழங்களில் உடலுக்கு அதிகம் சேரக் கூடாத கெட்ட கொழுப்புச் சத்துக்கள் இல்லை. ஆனால், பால், மாமிசம் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. பழங்களின் நன்மைகள் வருமாறு:–

அநேகம் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர். நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பரீட்சைக்குத் தயாராகும் குழந்தைகள் பழம் சாப்பிடுவது நல்லது. இது நிச்சயம் தேர்வில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

பழங்களைச் சாப்பிடுவது நம் மனதுக்கு இதமளிக்கும்

பழங்கள்… நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

பழங்கள் மட்டுமல்லாமல் பழரசங்களையும் சாப்பிடலாம். இவற்றைத் தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டால்தான் அதன் பலனை நாம் அறிய முடியும். சாப்பாட்டைச் சாப்பிடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் பழரசம் அருந்தலாம். அதன் நல்ல சத்துக்கள் ரத்தத்தில் எளிதில் கலக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *