மேட்டூர், ஜன. 25–
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று 815கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 819கன அடியிலிருந்து வினாடிக்கு 815கன அடியாக சரிந்துள்ளது.
நீர்மட்டம் 105 அடி
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 105.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.07 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 71.56 டி.எம்.சியாக உள்ளது.