செய்திகள்

புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய அட்டவணை

சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு

சென்னை, டிச.9-

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கு புதிய அட்டவணை வெளியிடப்பட்டள்ளது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ந் தேதி முதல் 9ந் தேதி வரை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் 11ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெறும். மேலும் இதுகுறித்த விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *