செய்திகள்

புதிய கிரிமினல் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

டெல்லி தள்ளுவண்டிக்காரர் மீது முதல் வழக்கு

புதுடெல்லி, ஜூலை 1–

புதிய கிரிமினல் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி தள்ளுவண்டிக்காரர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த டிசம்பர் 21–ந்தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்துள்ளது.

நேற்று இரவு டெல்லி ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி, சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார். அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அங்கிருந்து அகலும்படி ரோந்து பணியில் இருந்த காவல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் தள்ளு வண்டிகைக்காரர் அங்கிருந்து அகண்டு செல்லாத நிலையில் அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285ன் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. டெல்லி கமலா மார்கெட் காவல் நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த குற்றத்துக்கு அதிகபடச்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தத்க்கது.

பாதிக்கப்பட்டோருக்கு விரைவான சிகிச்சை

பெண்கள் மீதான தாக்குதல், குழந்தைகள் தொடர்பான குற்றப் புகார்கள், வயது மூத்தவர்கள் ஆகியோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யும் இந்த புதிய சட்டங்கள். இந்த சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ள வழி செய்யும். பாதிப்புக்குள்ளானவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது இருக்காது. தேவைப்படும் போது சென்றால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும். மின்அஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.

வீண் வாய்தாக்கள் இல்லை

வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற முடியும்.

60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் வரையப்பட வேண்டும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்கு மிகாமல் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

பாதிக்கப்படுவோர் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் மின்னணு புகார் அளிக்கலாம். போலீஸ் எல்லை பிரச்சினை குறையும். காகித ஆவணங்கள் குறையும். இது போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த சட்டங்கள் இன்று அமலுக்கு வந்தது. இது குறித்து நீதித்துறை, போலீஸ் பிரிவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *