செய்திகள்

பிளஸ் 2 வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கலாம்?

சென்னை, மே.6 –

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அடுத்து மேற்படிப்பு படிக்க ஏராளமான படிப்புகள் இருக்கின்றன.

அவற்றின் விபரம் அறிய தொடர்ந்து படியுங்கள்:

போட்டி நிறைந்த இன்றைய சூழ்நிலையில் வேலை வாய்ப்புகள் நிறைந்த பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஈ. இசிஇ, பி.ஈ. இஇஇ, பி.டெக் 4 ஆண்டு படிப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து படித்து முடித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

மேலும் பி.ஈ. கட்டிடக்கலை, பி.ஈ. சிவில் , எலக்டிரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங், பயோடெக்னாலஜி என்ஜினீயரிங், பி.ஆர்க், டேடா சயின்ஸ், டெக்ஸ்டையில் , ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிக்கலாம்.

பி.எஸ்சி நர்சிங், விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகியவையும் படிக்கலாம்.

பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் , ( 3 ஆண்டு படிப்பு), விசுவல் கம்யூனிகேசன்ஸ், (3 ஆண்டு படிப்பு ) , பொரன்சிக் சயின்ஸ் (3 ஆண்டு படிப்பு ) ஆகியவையும் படிக்கலாம்.

இவை தவிர ரோபாடிக்ஸ், ஆட்டோமேசன், மாஸ் கம்யூனிகேசன், பிசியோதெராபி, மெசின் லேர்னிங், அனிமேசன், கமர்சியல் பைலட் லேர்னிங், பேசன் டிசைனிங், ஓட்டல் மேனேஜ் மென்ட் , இண்டர்நேசனல் பிசினஸ் மேனேஜ் மென்ட் , கேம் டிசைன், பிலிம் ஸ்டிடியோஸ் அண்ட் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி ஆகியவையும் படிக்கலாம்.

3 ஆண்டு , 5 ஆண்டு சட்டக்கல்வியும் படிக்கலாம்.

மாணவர்கள் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப இந்தப் படிப்புகளில் விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இந்தத் தொழில்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் பெற்றோருடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை மேலாளரை அணுகினால் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் உதவி பெறவும் வாய்ப்பிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *