செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் பயணி தவறவிட்ட நகையை திருப்பிக் கொடுத்த பெண் பணியாளருக்கு பாராட்டு

திருத்தணி. ஜன.27–

திருத்தணி முருகன் கோயில் தங்கும் விடுதியில் பக்தர் தவறவிட்ட நகைகள் திருப்பிக் கொடுத்த பெண் துப்புரவு பணியாளருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவராவ்,. இவரது மனைவி சேஷ்குமாரி மற்றும் குடும்பத்தார் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து கோவிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் விடுதியில் அரை எடுத்து தங்கினர்.

பின்னர் விடுதி அறையை காலி செய்து சென்ற நிலையில் அந்த அறையை சுத்தம் செய்ய கொல்லாபுரியம்மாள் என்கிற ஒப்பந்த துப்புரவு பெண் ஊழியர் அறையை சுத்தம் செய்த போது அந்த அறையில் ஆறரை சவரன் நகை பக்தர் தவறவிட்டதை பார்த்துள்ளார். உடனடியாக அதனை கொண்டு சென்று கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். கோயிலில் நிர்வாகம் சார்பில் நகைகள் தவறவிட்ட பக்தவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

வறுமையிலும் நேர்மையாக செயல்பட்டு நகைகள் பக்தருக்கு திருப்பி கொடுத்த பெண் தொழிலாளியை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயில் இணையர் ரமணி, டி.எஸ்.பி. விக்னேஷ் ஆகியோர் முன்னிலையில் அறங்காவல் குழுத் தலைவர் ஸ்ரீதரன் பெண் தொழிலாளியை பாராட்டி பரிசு வழங்கினார். திருக்கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷாரவி , காவல் ஆய்வாளர் மாட்டின் பிரேம் ராஜ் உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *