செய்திகள் நாடும் நடப்பும்

தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ்


ஆர்.முத்துக்குமார்


சமீபத்தில் ‘டைம்ஸ்’ இதழ் உலகின் தலைசிறந்த நிறுவனங்களை பட்டியலிட்டு உள்ளது.

மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபெட், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. வருவாய், ஊழியர்களின் திருப்தி, சுற்றுச்சூழல், – சமூக – பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களே முன்வரிசையில் உள்ளன.

“உற்பத்தித் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு மிகக் குறைவாக உள்ளது. இதனால் அவை பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன” என்று டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

உலகின் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள ஒரே நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டைம்’ இதழ் சர்வதேச அளவில் முக்கியமான செய்தி ஊடகமாகும். டைம் இதழும் தரவுசேகரிப்பு நிறுவனமான ஸ்டேடிஸ்டாவும் இணைந்து உலகளவில் 750 நிறுவனங்களின் பட்டியலை உருவாக்கியுள்ளன.

தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி என பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து மொத்தம் 8 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 64-வது இடத்தில் உள்ளது.

விப்ரோ 174–-வது இடத்திலும் மஹிந்திரா குழுமம் 210–-வது இடத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 248-வது இடத்திலும் உள்ளன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 262, ஹெச்டிஎஃப்சி பேங்க் 418, விஎன்எஸ் குளோபல் சர்வீசஸ் 596, ஐடிசி 672-வது இடங்களில் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *