செய்திகள்

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.528 குறைவு

சென்னை, அக். 3–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிடுகிடுவென அண்மை காலமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த மாதத்தின் இறுதி நாட்கள் தொடங்கி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் அதிரடியாக குறைந்து வருகிறது.

சவரனுக்கு ரூ.528 குறைவு

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.2 குறைந்து ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.2000 குறைந்து ரூ.73,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *