செய்திகள் நாடும் நடப்பும்

சீனாவின் அச்சம்


தலையங்கம்


சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நடைபெற்ற அமன் யூயி-2023 யுத்த பயிற்சிகள் ஆசியான் நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்தியக் கடற்படை அனைத்து ஆசியான் உறுப்பினர்களையும் முதல் இந்திய ஆசியான் கூட்டுக் கடல்சார் பயிற்சியில் ஈபெட்டது அல்லவா? அதை சீன நமது ராணுவ நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியிருப்பதாக விமர்சித்தது!

சீன ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ இப்படிப்பட்ட பயிற்சிகளைத் தொடர விரும்பினால் அதை நாம் தவறாக நினைக்கப் போவதுயில்லை,

ஆனால் ஆசியான் அணியை ராணுவ குழுமமாக மாற்றிவிடக் கூடாது அல்லவா!

இந்த ஐந்து ஆசியான் நாடுகளுடன் பெய்ஜிங்கின் மிகப்பெரிய கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவப் பயிற்சியானது, பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு நெருடல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,

தென்கிழக்கு ஆசிய நாடுகள் இரு சக்திகளுக்கு இடையில் சமநிலைப்படுத்த “எச்சரிக்கையான ஈடுபாட்டை” பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் 10 நாள் கூட்டு ராணுவப் பயிற்சிகள் “அமன் யூயி” என்று அழைக்கப்படும் பயிற்சியில் பங்கேற்கின்றன, இந்த ஒத்திகையில் 3,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மணிலா ஆசியானுக்குள் உரிமை கோரும் மாநிலமாக தனிமைப்படுத்தப்படலாம் என்ற நிலையும் உருவாகி விட்டது.

கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சீனா தொடர்ந்து இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டாலும் தென் சீனக் கடலில் ஒன்றுடன் ஒன்று உரிமை கோரும் நாடுகள் ஆகும்.

மேலும் மலேசியா மற்றும் வியட்நாம் பலதரப்பு இராணுவப் பயிற்சியில் சேருவது மிக அரியது.

மொத்ததில் சீனா ஆசிய பகுதியில் அமெரிக்காவின் அதிக்கம் வந்து விடக் கூடாது என்று எடுத்து வரும் நடவடிக்கை என்பது என்றால் இவை நமது பாதுகாப்பு எல்லைக்கு எந்த அச்சமும் கிடையாது.

ஆனால் சீனா இப்படி ஒரு பயிற்சியை இந்த வருடம் மே மாதத்தின் தொடக்கத்தில் இந்தியக் கடற்படை அனைத்து ஆசியான் உறுப்பினர்களையும் முதல் இந்திய ஆசியான் கூட்டு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க வைத்த வெற்றியை தொடர்ந்து தனது தென் சீனக் கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்கான நிகழ்ச்சியாக ஆசியான் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் சீனாவின் சதியா? என்ற அச்சக் கேள்வியும் எழத்தான் செய்கிறது.

ஆசியானுடன் இந்தியாவின் உறவு மிகவும் முக்கியமானது. ஆசியா-பசிபிக் பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மையின்மை மற்றும் சமூக பதட்டங்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. புதிய சக்திகளின் எழுச்சி, வளர்ந்து வரும் சர்வதேச வர்த்தக போட்டி, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து எழும் பல சவால்களை இப்பகுதி தொடர்ந்து எதிர்கொள்கிறது.

ஆசியானுடனான இந்தியாவின் உறவு சீனாவுக்கு அச்சம் தருவதைப் புரிந்து கொண்டு இது பற்றிய நமது நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் உரிய வகையில் அறிவித்து நமது நிலைபாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *