செய்திகள் வாழ்வியல்

சளி, இருமல் , கப நோய் ,வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் மணத்தக்காளி


நல்வாழ்வுச் சிந்தனை


மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு போஷாக்கை வழங்கும். காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இதன் வற்றல் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை லேசாக நெய்யில் வதக்கிய பின்பு பயன்படுத்தலாம்.மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.

மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளி செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக்கொண்டு புண்களைக் கழுவலாம்.கறுப்பு நிறத்திலும் சில வகைகளில் சிவப்பு நிறத்திலும் இதன் பழங்கள் காணப்படும். பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல! பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பஞ்சங்களின் போது, இதன் பழம் உணவாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *