செய்திகள்

அர்ப்பணிப்பு மிக்க பொதுவாழ்வின் அடையாளம் சோனியா காந்தி

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை, டிச. 9–

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாழ்வின் அடையாளம்

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:–

‘அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.

சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும், எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும். நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும்!’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *