செய்திகள்

பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா

சமூக நீதியின் கலங்கரை விளக்கம் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு டெல்லி, ஜன. 24– சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 […]

Loading

செய்திகள்

ஆசாமில் 11வது நாள் யாத்திரை நான் பயப்படமாட்டேன்: ராகுல் ஆவேச பேச்சு

பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அமித்ஷாவுக்கு கார்கே கடிதம் கவுஹாத்தி, ஜன. 24– என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். நான் பயப்பட மாட்டேன்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10வது நாளான நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட […]

Loading

செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி, ஜன.24- பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஏற்றுக்கொண்டது. விமான நிலைய பாணியில் அங்கு சோதனை நடத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 13ந்தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர் திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். அவர்களும், நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த அவர்களுடைய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இச்சம்பவம் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டை […]

Loading

செய்திகள்

திமுக–காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: ஜனவரி 28 ந் தேதி பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 24– மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி கட்சிகள் […]

Loading

செய்திகள்

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி: 31 பதக்கத்துடன் 2 வது இடத்தில் தமிழ்நாடு

19–31 ந்தேதி வரை நடைபெறும் போட்டியின் 6 வது நாள் சென்னை, ஜன. 24– ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளின் 6 வது நாளில் தமிழ்நாடு அணி 12 தங்கப்பதக்கங்களை பெற்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னை, […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 160 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 6 பேருக்கு தொற்று டெல்லி, ஜன. 24– இந்தியாவில் புதிதாக 160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1886 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 236 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

ஆளுநரின் குடியரசு தின விழா விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை, ஜன. 24– குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அவர், 1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என ஆளுநர் ரவி பேசினார். ஆளுநரின் […]

Loading

செய்திகள்

ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக உள்ளது

முதல்வரின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா குற்றச்சாட்டு சிறீகாகுளம், ஜன. 24– ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று அவருடைய தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா சிறீகாகுளம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் அவையில் கட்சி தொண்டர்கள் இடையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா பேசியதாவது:- எனது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நடைபயணம் இச்சாபுரத்தில் நிறைவடைந்தது. மக்களின் அவல நிலையைப் புரிந்து கொண்டு, […]

Loading

செய்திகள்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்; கேளம்பாக்கத்தில் இருந்தே இன்று முதல் இயக்க வேண்டும்

அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம் சென்னை, ஜன. 24– ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது என்றும், மக்களின் விருப்பதற்கு ஏற்ப, கேளம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இன்றுமுதல் இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை, அங்காளம்மன் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் மக்களுடன் முதலமைச்சர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு தெரிவித்ததாவது:– மக்களுடைய […]

Loading

செய்திகள்

21 ஆயிரம் ஆவணங்கள் பதிவு: ஒரே நாளில் ரூ.168 கோடி ஈட்டிய பதிவுத்துறை

சென்னை, ஜன.24-– ஆவணங்களின் பதிவு மூலம் ஒரே நாளில் பதிவுத்துறை ரூ.168 கோடி ஈட்டியுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-– தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத் துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 31.1.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் 22.1.24 (நேற்று முன்தினம்) அன்று மட்டும் 21 ஆயிரத்து 4 ஆவணங்கள் […]

Loading