பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு நிவாரணம் கிட்டுமா? கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் (மீனாட்சி மகளிர் கல்லூரி அமைந்துள்ள பகுதி) மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெற இருப்பதையொட்டி வடபழனி, கே.கே.நகர், போரூர் செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் யுனைடெட் இந்தியா காலனி, முதல் பிரதான சாலை வழியாக (மக்கள்குரல் அலுவலகம், மெட்வே ஹாஸ்பிடல்ஸ், ஓட்டல் சரவணாபவன் அமைந்துள்ள பகுதி) திருப்பி விடப்பட்டுள்ளன. குறைந்தது அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு இந்தப் போக்குவரத்து மாற்றமே தொடர வாய்ப்பு உள்ளது. […]