செய்திகள்

மோடி திறந்து வைத்த ரூ.17,800 கோடி நவிமும்பை கடல் பாலத்தில் விரிசல்

மும்பை, ஜூன் 22–

நரேந்திர மோடியால் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட ரூ.17,800 கோடி மதிப்பிலான நவிமும்பை கடல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மும்பை–நவிமும்பையை கடல் மார்க்கமாக இணைக்கும் விதமாக ரூ.17,800 கோடியில் இந்தியாவின் மிகவும் நீளமான கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் கடந்த ஜனவரி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நவிமும்பையில் புதிய விமான நிலையமும் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக இந்த கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கடல் பாலம் திறக்கப்பட்டு சில மாதத்தில் அதில் கீறல் விழுந்துவிட்டதாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் விரிசல்

பாலத்தை இணைக்கும் சாலையின் ஓரத்தில் சில இடங்களில் கீறல் ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களை மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில்,”மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் வைத்துக்கொண்டு இப்பால கட்டுமான பணியில் ஊழல் செய்திருப்பது துரதிஷ்டவசமானது. பா.ஜ.க தலைமையிலான அரசு ஊழல் செய்வதில் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது. இந்த ஊழல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்.

அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ.யை பயன்படுத்தி ஊழல் அரசியல்வாதிகளை மிரட்டி பா.ஜ.கவில் சேர்க்கின்றனர். கர்நாடகாவில் முந்தைய பா.ஜ.க அரசு 40 சதவீத கமிஷன் பெற்றது. ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள தற்போதைய பாஜக அரசு 100 சதவீதம் கமிஷன் கேட்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

கடல் பாலத்தில் எந்த வித கீறலும் ஏற்படவில்லை என்றும், பாலத்தை இணைக்கும் சாலையில்தான் சில இடங்களில் கீறல் விழுந்திருப்பதாக இத்திட்டத்தை நிறைவேற்றிய எம்.எம்.ஆர்.டி.ஏ.தெரிவித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கீறல் விழுந்த இடத்தை சரி செய்யும் வேலையில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டுள்ளார் என்றும் எம்.எம்.ஆர்.டி.ஏ.தெரிவித்துள்ளது. பாஜக துணை முதல்வரும் அதையே வழிமொழிந்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *