செய்திகள்

மே 29 ந்தேதி எவரெஸ்ட் நாள்

ஆக்ஸிஜன் இல்லாமல் எவரெஸ்ட் ஏறி பாகிஸ்தான் வீரர் சிர்பாஸ் கான் சாதனை

மலை ஏற்றத்தில் உள்ள சாவல்கள் என்ன?

பாகிஸ்தான் மலையேறுபவரான சிர்பஸ் கான், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் உலகின் உயரமான மலை உச்சியான எவரெஸ்ட்டின் உச்சத்தை, வெற்றிகரமாக தொட்டதன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

“இமேஜின் நேபாள் 2024 எவரெஸ்ட் பயணக் குழு” வின் ஒரு பகுதியாக சிர்பாஸ் கான் பங்கேற்றார், இந்த குழுவில் 14 சர்வதேச மலையேறுபவர்கள் மற்றும் 18 அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்கள் (நேபாள், திபேத் மலைப்பகுதியில் வசிப்பவர்கள்) அடங்குவர்.

இந்த பயணக் குழு மே 21ம் தேதி காலை 5:15 மணி முதல் 10 மணிக்குள்ளாக எவரெஸ்ட் உச்சத்தை அடைந்தது. சிர்பாஸ் கானின் குறிப்பிடத்தக்க சாதனை . இந்த சாதனையானது அவரது அசாத்தியமான உடல் மற்றும் மன வலிமை, அத்துடன் மலையேற்றத்தில் அவரது நிபுணத்துவத்தையும் வெளிக்காட்டுகிறது.

இந்த பயணக் குழுவில் சீனா, போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மலையேறுபவர்களும், நேபாளத்திலிருந்து வந்த அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்களும் இருந்தனர். அவர்கள் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் மரணம்

இதற்கிடையில், கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட் ஏற முயற்சித்த ருமேனிய மலையேறுபவர் கிரூய், பயணத்தின் மூன்றாம் முகாமில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எவரெஸ்ட்டில் 8,000 மீட்டருக்கு மேலே சென்ற நிலையில் மற்ற இரண்டு பேரும் காணாமல் போனதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயரமான மலைகளில் ஏறுவதற்கு பொதுவாக கையடக்க ஆக்ஸிஜன் கருவி தேவைப்படுகிறது, மேலும் எவரெஸ்ட்டைக் ஏறுவதற்கு இது அவசியம் என்று கருதப்படுகிறது, இருப்பினும் சில மலையேறுபவர்கள் மற்றும் குறிப்பாக ஆல்பைன் பாணி மலையேறுபவர்கள் 1978 ஆம் ஆண்டில் ரெய்ன்கோல்ட் மெஸ்னர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த போக்கு, ஆக்சிஜன் இல்லாமல் எவரெஸ்ட்டை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

அதற்கு முன்பு, கூடுதல் ஆக்ஸிஜன் துணை இல்லாமல் எவரெஸ்ட்டின் உச்சத்தை அடைவது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது என்றே கருதப்பட்டது. எவரெஸ்ட்டின் உச்சத்தை அடைபவர்களில் 95 சதவீதம் பேர், ஆக்சிஜன் சிலிண்டர் கருவியை பயன்படுத்தியே மேலே ஏற முடியும் என்றே கூறப்படுகிறது.

மலை ஏறும் சாகசக்காரர்கள் அல்லது மலையேறுபவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டைக் ஏறவே விரும்புகிறார்கள். ஆனாலும் அண்மை காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டைக் ஏறுவது சாத்தியமானது என்றாலும் ஆபத்தானது என்று உறுதிப்படுத்துகிறார்கள்.

5 மைல் உயரம்

எவரெஸ்ட்டின் உச்சம் கடல் மட்டத்திலிருந்து 5 மைல் உயரத்தில் உள்ளது. குறைந்த காற்று அழுத்தம் காரணமாக உண்மையில் மூன்றில் ஒரு பங்கு வளிமண்டலமே அங்கு உள்ளது. 1960 களில் உயரமான மலைகளில் ஏறுவதால் உடலில் ஏற்படும் மாறுபாடுகளை மருத்துவர்கள் ஆய்வு செய்தார்கள். மேலும் எவரெஸ்ட்டின் உச்சியில் உள்ள வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அது ஓய்வெடுக்கும் மனிதர்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கண்டறிந்தனர். இதுபோன்ற சாதனை முயற்சியை மேற்கொள்வது கூட தீவிரமான, திரும்பப் பெற முடியாத மூளை பாதிப்பு (சிறந்த பட்சத்தில்) அல்லது மரணத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மலை ஏறுவதற்கான ஆக்சிஜன் சிலிண்டர் கருவி மிகவும் விலை உயர்ந்தது என்று கூறுகின்றனர். ஏனென்றால், மலையேற்ற பயணத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் செலவாகிறது என்று கூறப்படுகிறது. இதில், துணைக்கு வரும் ஷெர்பாக்கள், விமான கட்டணம், தங்குவது, உணவு என பெரும் செலவு ஏற்படும் நிலையில், மலை ஏறுவதற்கான ஆக்சிஜனை, தரை வழியில் மட்டுமே கொண்டு வர முடியும் என்கிறார்கள்.

எவரெஸ்ட் நாள்

விமானத்தில் அதனை கொண்டு வர அனுமதி இல்லை என்பதால், தரை வழியாக அல்லது கடல் வழியாக மட்டுமே ரஷ்யாவில் இருந்து கொண்டு வர முடியும். அதனை சுமந்து வர மலையேற்ற பயிற்சியாளர்களும் வேண்டும் என்பதால் அது கூடுதல் செலவாக கருதப்படுகிறது.

ஆக்ஸிஜன் எடுத்துச்சென்றாலும் இல்லாவிட்டாலும், எவரெஸ்ட் சிகரம் ஏறுதல் பல்வேறு சவால்களை கொண்டுள்ளது என்பதே உண்மை. இதில், ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து செல்வதா ? அல்லது எடுத்துக்கொள்ளாமல் இருப்பதா என்பது குறித்தெல்லாம் எளிய மக்கள் யார் கவலைப்பட விரும்புகிறார்கள்?

மே 29 ந்தேதி சர்வதே எவரெஸ்ட் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட்டின் உச்சத்தை அடைந்தனர். அந்த நாள்தான் எவரெஸ்ட் நாளாக ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகிறது.

13 வயதில் சாதனை

முன்னதாக, உலகில் மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற உலக சாதனையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி படைத்துள்ளார். ஆந்திர மாநில சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதியில் தங்கி படிக்கும் 30 மாணவ, மாணவர்களுக்கு பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான லட்சுமி தேவதாஸ் என்பவரது மகள் மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் (வயது 13) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விட்டனர்.

மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்து, தேசிய கொடியுடன் அம்பேத்கர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ஆர். சங்கரன் ஆகியோரது உருவப் படங்களையும் எவெரெஸ்ட் சிகரத்தின் மீது பதித்தனர்.

மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பதாம் வகுப்புப் படித்து வரும் இவர்தான் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகக் குறைந்த வயதுடைய (13 ஆண்டுகள் 11 மாதங்கள்) சிறுமியாவார்.

2 வது சாதனை

இந்நிலையில், மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் பிளஸ் 2 மாணவி காம்யா கார்த்திகேயன், கடற்படை அதிகாரியான தன் தந்தை கார்த்திகேயனுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளம் சிறுமி என்ற பெருமையை படைத்தார்.

மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் படிக்கும் 16 வயதான காம்யா கார்த்திகேயன் எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு இந்திய கடற்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தந்தை கார்த்திகேயனும், அவரது மகள் காம்யா கார்த்திகேயனும், கடந்த ஏப்ரல் 3ம் தேதி பயணத்தை தொடங்கி கடந்த மே 20ம் தேதி 8849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தனர்.

இதன்மூலம், ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தை ஏறும் சவாலில் காம்யா இதுவரை 6 சிகரங்களை கண்டுள்ளார் என்று கடற்படை தெரிவித்துள்ளது. இவர் அடுத்ததாக ஏழாவது பயணமாக டிசம்பர் மாதம் அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையில் ஏறி ‘7 Summits Challenge’-ஐ நிறைவு செய்யும் இளைய பெண் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

காம்யா கடந்த 20220ம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள அகோன்காகுவா மலையின் ஏறி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காம்யா கார்த்திகேயன், கடந்த 2015 ஆம் ஆண்டில் சந்திரசிலா சிகரத்தை (12 ஆயிரம் அடி) ஏறி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஹர் கி டூனையும் (13, 500 அடி) தொட்டார். தொடர்ந்து, 2017ம் ஆண்டில் ரூப்குண்ட் ஏரி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் ஏறி கலக்கினார்.

காம்யா கார்த்திகேயன் உயரமான சிகரங்களை ஏறியதற்கு பாராட்டும் விதமாக பிரதமரின் தேசிய பால் சக்தி விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Everest #student #tamilnews #Makkalkural #Mumbai #Primeminister #Navy

#கடற்படை #மக்கள்குரல் #தமிழ்ச்செய்தி #எவரெஸ்ட் #சிகரம் #சாதனை #மும்பை #எவரெஸ்ட்நாள் #பிரதமர்

Related Videos:

GoPro Awards: Mt. Everest Expedition | Summiting the Tallest Mountain on Earth

All The Ways Mt. Everest Can Kill You | WIRED

Why Some Sherpas Say There Won’t Be Any Guides On Everest In 10 Years | Inside Everest

K2: The World’s Most DEADLY Mountain to Climb

Also watch :

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *