சென்னை,பிப்.6– ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களில் இருந்தோ இந்த மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? “போலீசுக்கு பணம் […]