செய்திகள்

மத அரசியலா, மனித அரசியலா? ஒரு கை பார்ப்போம்: உதயநிதி ஸ்டாலின் சபதம்

சென்னை, ஜன. 23–

மத அரசியலா, மனித அரசியலா? மனு நீதியா? சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கை பார்த்துவிடுவோம் என்றும் இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் ஸ்டாலினின் கரங்களில் சேர்ப்போம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் திமுகவின் இளைஞரணி 2 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். உலகிலேயே மிகப் பெரிய மாநாட்டு பந்தல் என்ற உலகச் சாதனை சான்றிதழும் மாநாட்டு மேடையிலேயே வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும் உரையாற்றினர்.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றி குறித்து இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

“இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி! இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் – இளைஞரணி நிர்வாகிகள் – வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீர்மானிக்கப்பட்ட வெற்றி

வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் தி.மு.கழக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை நம் கழகத் தலைவர்,முதலமைச்சர் அளித்தார். 2007 ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திய நம் முதலமைச்சர், 2024-ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் – உற்சாகத்தையும் தந்த கழகத் தலைவர், முதலமைச்சருக்கு என் அன்பும், நன்றியும்.

நம்முடைய சேலத்துச்சிங்கம் வீரபாண்டியாரின் சேலம் மண்ணில் இந்த மாநாட்டை நடத்துவது என்று முடிவான போதே, இந்த மாநாட்டின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மாநாடு நடக்கும் இடம் சேலம் என்று நமது தலைவர் அவர்கள் அறிவித்த அடுத்த நொடியில் இருந்து வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல கழக முதன்மை செயலாளர் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு களத்தில் இறங்கி செயலாற்றத் தொடங்கி, தான் ஒரு செயல் புயல் என்று மாநாட்டின் ஏற்பாட்டின் மூலம் நிரூபித்தார். இந்த ஏற்பாடுகள், மாநாடு என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணமே வகுத்திருக்கின்றன.

9 லட்சம் சதுர அடி பந்தல்

சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாடு, நம் இயக்கத்துக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என்பதை உணர்ந்து, மாநாட்டின் வெற்றிக்காக தமிழ்நாடெங்கும் பயணித்தோம். இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டங்களின் வாயிலாக மாநாட்டுக்கு வருமாறு அனைவரையும் நேரடியாக அழைத்தோம். அந்தக் கூட்டங்களே ஒரு மினி மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சொல்லை செயலாக்க எட்டுத்திக்கும் களப்பணியாற்றிய இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் – மாவட்ட – மாநகர – மாநில – ஒன்றிய – நகர – பகுதி – வட்ட – பேரூர் – ஊர்க்கிளை அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் நுழைவு வாயில் – அண்ணா திடல் – கலைஞர் அரங்கம் – பேராசிரியர் மேடை – வீரபாண்டியார் கொடிமேடை – கழக முன்னோடிகள் வீரபாண்டி ஆ.ராஜா – வீரபாண்டி ஆ.செழியன் – சந்திரசேகரன் – நீட் ஒழிப்பு போராளிகளான தங்கை அனிதா – தம்பி தனுஷ் பெயரில் நுழைவு வாயில்கள் அமைத்து, மாநாட்டு பந்தலை 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கித் தந்த அண்ணன் பந்தல் சிவாவுக்கும், அன்பகம் வடிவிலான நுழைவு வாயில் அமைத்து முரசொலி மாறன் பெயரில் இளைஞரணி புகைப்படக் காட்சியை ஏற்பாடு செய்த சுப்புவுக்கும் என் அன்பும், நன்றியும்.

100 இருசக்கர வாகனங்களில் குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே இருந்து புறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி இறுதியில் மாநாட்டின் திடலுக்கு வந்து சேரும் போது பல்கிப்பெருகி 1000 வாகனங்களாக நம் கழகத்தலைவர் முதலமைச்சர் முன்பாக அணிவகுத்துச் சென்ற காட்சி நம் கண்களில் அப்படியே நிற்கிறது. அதில் பங்கேற்ற அத்தனை திமுக ரைடர்களுக்கும் நன்றி.

நவீன டிரோன் ஷோ

முக்கியமாக வானத்தை திரையாக்கி, டிரோன்களை தூரிகையாகக் கொண்டு நடத்தப்பட்ட டிரோன் ஷோ, இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு புதிய நவீன நிகழ்ச்சியாக நம் மாநாட்டிற்கும் முந்தைய நாள் நடைபெற்றது. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் – நம் தாய்த்தமிழ்நாடு – உயிருக்கு நிகரான உதயசூரியன் – கலைஞர் அவர்களின் தமிழ் வெல்லும் வாசகம் – இளைஞரணியின் இலட்சினை – ஒற்றைச் செங்கலைத் தாங்கிய எனது உருவம் என வானில் நட்சத்திரங்களுக்குப் போட்டியாக டிரோன்கள் மின்னின. அந்தக் கண்கொள்ளாக் காட்சி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நம் நெஞ்சத்திலிருந்து அகலாது. அதை ஏற்பாடு செய்த குழுவினருக்கு என் நன்றி.

திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தான் நாட்டின் எதிர்காலச் சட்டங்கள் என்பார்கள். அந்த வகையில் நமது மாநாட்டுத் தீர்மானங்கள் அத்தனையும் ஆதிக்கத்தையும் – பாசிஸ்ட்டுகளையும் குறிவைத்து தாக்கும் கொள்கை ஏவுகணைகள். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் அத்தனையும் கரவொலி எழுப்பி நிறைவேற்றி தந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய இளைஞர் அணியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும், மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம்.

நீட் ஒழிப்பு என்பது கழகத்தின் உரிமை முழக்கமாக மாறியுள்ள சூழலில், களத்திலும் – இணையத்திலும் நீட் விலக்கு நம் இலக்கு என 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றிருந்தோம். அவற்றில் அஞ்சல் அட்டைகளில் நாம் பெற்ற கையெழுத்துகளை மாநாட்டு மேடையில் நம் தலைவர் கரங்களில் ஒப்படைத்தோம். அவை, இந்திய குடியரசுத்தலைவரிடம் விரைவில் வழங்கப்படவுள்ளன. அதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.

நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெறப்போகிற மாபெரும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *