செய்திகள்

பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேசபந்து நாளிதழ் கணிப்பில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

சென்னை, ஜூன் 3–

நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும்பான்மை பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது எனவும் தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. நேற்றுடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி

இந்நிலையில் தான் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக ஒரு கருத்து கணிப்பின் முடிவு என்பது ‘இந்தியா’ கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த கருத்து கணிப்பை மேற்கொண்டது தேசபந்து நாளிதழின் டிஜிட்டல் சேனலாகும். இந்த கருத்து கணிப்பின்படி இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகள் தேவை என்ற நிலையில எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 207 முதல் 241 தொகுதிகளை மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவு பாஜகவினருக்கு அதிர்ச்சியையும், காங்கிரஸ் உள்பட ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *