செய்திகள்

4 கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 66.95 சதவீத வாக்குப்பதிவு

இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு புதுடெல்லி, மே.17- நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்றும், 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.10 லட்சம் கோடி ஆனது: நிதித்துறை அதிகாரி தகவல்

சென்னை, மே.3-– நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.10 லட்சம் கோடி ஆனது என்று நிதித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். நாம் வாங்கும் பொருட்களுக்கும், பெறும் சேவைகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் கிடைக்கும் தொகையை மத்திய–-மாநில அரசுகள் பிரித்து கொள்கின்றன. இப்போது ஜி.எஸ்.டி. வரி பொருட்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள்

ஆர்.முத்துக்குமார் புயல் அடித்து ஓய்ந்து விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தேர்தல் நாள் ஏப்ரல் 19 அன்றே தமிழகத்தில் முடிந்துவிட்டாலும் தேர்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது தொடர்கிறது. குறிப்பாக வியாபாரிகள் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்வதில் சிக்கல் தொடரத்தான் செய்கிறது. ஏன் ஒருவர் அதிகத் தொகையை ரொக்கமாக கையாளுகிறார் என்றால் அவரது தொழிலில் அப்படி ஒரு நிலை ஏற்படக் காரணம் மத்திய மாநில வரிச்சுமை தான்! பெரிய நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றிக் கொண்டு குறைந்த […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா பழுது

ஈரோடு, ஏப். 29– ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் […]

Loading

செய்திகள்

ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, ஏப்.28–- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக நாளை கொடைக்கானலுக்கு செல்கிறார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19–-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஏப்.27-– தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. பெட்டியில் 3 பேர் கட்டுக்கட்டாக பணம் […]

Loading