செய்திகள்

சாதனை படைத்த பெண்கள்: 1. எலிசபெத் லிசி கவி

திருநெல்வேலி அருகில் உள்ள பூத்தக்காயம் கிராமத்தைச் சேர்ந்தவர் எலிசபெத் லிசி கவி. இவர் திருமணமான பின்னர் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் உள்ள ஒரு வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைதேடிச் சென்றார். அங்கு தன்னைப் போலவே பல இளம் பெண்களும் நடு வயது பெண்களும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை வாங்கித் தாருங்கள் என்று கேட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தன்னைப் போன்ற பெண்கள் படும் இன்னைலைக் கண்ட எலிசபெத் லிசி கவி , ‘‘ஏன் நாமே இந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தக்கூடாது’’ என்று சிந்தித்தார். அதைச் செயலிலும் காட்டத் தொடங்கினார். அதையே தன் சுயவேலைவாய்ப்பு நிறுவனமாக எடுத்துக் கொண்டார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தனது சொந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

Also Read : 2023 ஆம் ஆண்டின் பேசுபொருளாக இருந்து முத்தான சாதனைகள் செய்த 10 பெண்கள்

அதன் மூலம் ஆதரவற்ற பெண்கள் , கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பாதுகாப்பான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விளிம்பு நிலையில் உள்ள பல பெண்களுக்கு மதிப்பு மிக்க வேலைகளை பெற்றுக் கொடுத்து அவர்கள் நல்ல மாத வருமானத்தைப் பெற்று புதிய வாழ்வு வாழச்செய்து வருகிறார்.

அவர் மூலம் வேலை பெற்ற பெண்கள் எண்ணிக்கை உயரந்து கொண்டே இருக்கிறது.

தனக்கு ஒரு வேலை தேடப்போய் துணிச்சலாக சொந்தமாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவளித்து வேலை தேடிக்கொடுத்து வரும் எலிசபெத் லிசி கவிக்கு சென்னையில் உள்ள பல சமூக அமைப்புகள் சிங்கப்பெண் , சாதனைப் பெண் என்ற விருதுகள் கொடுத்து பாராட்டி யிருப்பது பெருமைக்கு உரியது.

#பெண்கள்அதிகாரம் #பெண்ணியம் #பாலின சமத்துவம் #பெண்களை ஊக்குவிக்கும் பெண்கள் #பெண்தொழிலதிபர்கள் #மக்கள்~குரல்

#women #womenempowerment #womenpower #entrepreneurship #Feminism #GenderEquality #WomenLeaders #WomenInBusiness #WomenSupportingWomen #GirlPower #WomenEntrepreneurs #makkalkural


தொகுப்பு :– அ.இரா.குணசேகரன்



Loading

One Reply to “சாதனை படைத்த பெண்கள்: 1. எலிசபெத் லிசி கவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *