செய்திகள்

குறைந்த வாக்குப்பதிவு ஏன்? விடை தேடி தேர்தல் ஆணையம் முனைப்பு


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையும் நிறைவு பெற்று வெற்றி பெற்றவர்கள் யார்? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவந்து மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய மந்திரி சபையும் பதவி ஏற்றும் விட்டது.

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருமித்த குரலில் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஆதரவு தந்துள்ளனர்.

இந்தக் கூட்டணி ஆட்சி ஆறு மாதங்களுக்கு மேல் தப்பாது! என எதிர்கட்சிகள் ஆரூடம் கூற துவங்கி விட்டனர்.

நம் நாட்டில் கூட்டணி ஆட்சி புதிது கிடையாது. அதிருப்தி கட்சிகள் பின்னாளில் உருத் தெரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. கூட்டணி ஆட்சித் தத்துவத்தில் நிபுணவத்துவம் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இருந்தும் தொடர்ந்து மூன்று பொது தேர்தல்களிலும் ஆட்சியை பிடிக்க வேண்டிய அளவிற்கு எம்.பி. சீட்டுகளை வெல்ல முடியாது தவிக்கின்றனர்.

அதுபோன்ற நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக கூட்டணி தர்மத்தை முன்வைத்து நல்லாட்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தர கட்டுப்பாடுகளுடன் நிச்சயம் செயல்படுவார்கள் என நாடே எதிர்பார்க்கிறது.

உலகமே போற்றும் வகையில் தேர்தல் ஆணையம் மிக சிறப்பாகவே இம்முறை தேர்தலை நடத்தி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

இனி அடுத்து செய்ய வேண்டியது ஜனத்தொகை கணக்கெடுப்பு, அதற்கான விரிவான திட்டம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

நம் ஜனநாயகத்தில் இருக்கும் குறைபாடு பல தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்து இருப்பது தான்.

தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து தொகுதிகளிலும் கல்வி நிறுவனங்களே வாக்கு எண்ணும் மையங்களாக உள்ளன.

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்தி, அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் (ஸ்டிராங் அறை) வைக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

பயன்பாட்டுக்கு பிறகு மின்னணு இயந்திரங்களை மீண்டும் பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே 32 மாவட்டங்களில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மாவட்டங்களுக்குள் அடங்கிய சட்டப்பேரவை தொகுதி வாரியாக இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். மேலும் 6 மாவட்டங்களில் கிடங்குகள் கட்ட ஆணையத்தின் அனுமதி பெற்று, தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக ஆணையத்துக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் இனி இதுதொடர்பான புகார்களை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுவாக மட்டுமே அளிக்க முடியும். அதற்கு 45 நாட்கள் அவகாசம் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பில் புகார் அளித்தால், அதுபற்றி விசாரணை செய்ய வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் காலத்திலும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருப்பார்கள். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கு இப்போதும் விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக இடம்பெயர்தல் காரணமாகவும் வாக்குப்பதிவு குறைகிறது. வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இரட்டைப் பதிவுகளை சோதனை செய்யும் வசதி தற்போது தொகுதிக்குள் மட்டுமே உள்ளது. இதேபோல நாடு முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் இருக்கிறதா என ஆய்வு செய்வதற்கான நடைமுறை வரவேண்டும். மாநிலத்துக்குள் இந்தநடைமுறை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இனி இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும்.

மேலும் கடந்த 14 வருடங்களில் இறந்தோர் பெயர்களும் பல தொகுதிகளில் அகற்றப்படாது இருக்கிறது. மாநகராட்சி பதிவேட்டில் மரணம் அடைந்து விட்ட விவரங்கள் தேர்தல் ஆணையப் பதிவேட்டில் வராது போக என்ன காரணம் என்பதையும் ஆராய்ந்து உரிய மாற்று முயற்சியை அறிவித்தாக வேண்டும்.

இப்படி பல வாக்காளர்கள் பெயர் இருந்தும் வாக்குப்பதிவு செய்யாத நிலையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து தான் இருப்பதாகக் காட்டும்.

ஆக ஜனத்தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெற்று அதன் பின் கிடைக்கும் புதுப்பட்டியலுடன் வாக்காளர் பட்டியலும் மாற்றம் கண்டு புதுப்பிக்கப்பட்டால் வாக்குப்பதிவு சதவிகிதமும் வருங்காலத்தில் அதிகரித்து இருப்பதாக காட்டும் என்று எதிர்பார்க்கலாம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *