செய்திகள்

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம்

நிதின் கட்கரி எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூன் 12–

இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

இன்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி பொறுப்பேற்றார். அவர் அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்ற புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:–

‛‛மத்திய அமைச்சரவையில் மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள். தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். அவரது தலைமையில், இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்புகள் துரித வேகத்தில் உருவாக்கப்படும்” என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 146ன் கீழ் இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது குற்றமாகும். அதன்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் முதல்முறை பிடிப்பட்டால் 3 மாதம் சிறை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *