சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், வணிகவரித் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். வணிகவரித் துறையின் 2018–19ஆம் ஆண்டிற்கான […]