செய்திகள்

9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும்; வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்

சென்னை, பிப். 26– தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 9,10, 11ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வில் ‘ஆல் பாஸ்’ அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் படித்து வந்தனர். மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு, பிப். 20 ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, வஉசி பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோவிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பசுமைக் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்பொழுது, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து […]

செய்திகள்

கொடிவேரி அணை சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும்

ஈரோடு, பிப். 19– கோபி அடுத்த கொடிவேரி அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், சில தினங்களில் அந்த சுற்றுலா மையம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி சட்டமன்ற தொகுதியில் வேட்டைக்காரன் கோவில் பகுதியிலுள்ள இந்திராநகர் குளம் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– வேட்டைக்காரன் கோயில் குளம் பராமரிப்பின்றி இருந்தது. முதலமைச்சர் இதற்காக 5.77 கோடி நிதி ஒதுக்கி இது ஒரு சிறந்த […]

செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு தேதிகள்

ஈரோடு, பிப். 18 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வினோபாநகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளது. வனத்துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது. தேர்தலை பொறுத்தவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்கு பிறகு பொதுத்தேர்வு […]

செய்திகள்

12–ம் வகுப்பு பொதுத்தேர்வு: மே 3–ந் தேதி தொடக்கம்

21–ந் தேதி வரை நடைபெறும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு: மே 3–ந் தேதி தொடக்கம் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு சென்னை, பிப். 17– தமிழகத்தில் 12–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே 3–ந்தேதி அன்று தொடங்கி 21–ந்தேதி அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 9, 11–ம் வகுப்பு […]

செய்திகள்

10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

ஈரோடு, பிப்.12 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசின் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் […]

செய்திகள்

6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்பில்லை

சென்னை, பிப். 11– தற்போதைய சூழலில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிக்கு வர அரசு அனுமதி […]

செய்திகள்

கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.15 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளி விபத்தில் 26 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு ரூ.14.58 லட்சம் நிதி வழங்கினார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார். தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, […]

செய்திகள்

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டசபையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சூளுரை சென்னை, பிப்.4 தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று சட்டசபையில் இன்று கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் என்றும் அவர் கூறினார். சட்டசபையில் இன்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் […]